சிறு குறு விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருந்தது.
New Delhi: விவசாயிகளுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கும் திட்டத்தில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
2019 நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் ரூ.75,000 கோடி செலவில் 12 கோடி சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 உதவித் தொகை அளிக்கும் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
அந்த அறிவிப்பில், நிகழாண்டில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் தலா ரூ.2,000 விதம், 3 தவணைகளாக ரூ.6,000 வரவு வைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
சிறு குறு விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருந்தது. இதன்படி 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 3 தவணைகளாக ரூ. 2 ஆயிரம் என மொத்தம் ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரத்தை மத்திய அரசு செலுத்தும்.
இதனைப் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த திட்டத்தில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான தேதியை நவம்பர் 30 வரைக்கும் மத்திய அரசு நீட்டித்துள்ளது.
கிராம நிர்வாக அலுவலகங்களில் விவசாயிகள் தங்களது நில விவரம், வங்கிக்கணக்கு, ஆதார் எண்ணை சமர்ப்பித்து திட்டத்தில் சேரலாம்.