Aadhar Card: ஆதார் கார்டுக்கு அரசியலமைப்பு அந்தஸ்து உள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
New Delhi: பயோமெட்ரிக் தகவல்களைப் பெற்று, தேசிய அடையாளத்தைத் தரும் ஆதார் கார்டு திட்டம், தனி மனித சுதந்திர உரிமையை பறிக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், ஆதார் பயன்பாட்டுக்கு சில கட்டுப்பாட்டுகளை விதித்துள்ளது நீதமன்றம். அனைத்து முக்கிய பரிமாற்றங்களுக்கு ஆதார் கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் மூலம் தெரிவித்துள்ளது. தனி மனித சுதந்திரம் என்பது அடிப்படை உரிமை என்பதையும், அதில் சில கட்டுப்பாடுகள் அவசியம் என்பதையும் உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது.
தீர்ப்பு குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்:
- தனியார் நிறுவனங்கள், ஆதார் கார்டு குறித்து தகவல்களை கேட்க முடியாது.
- இந்த தீர்ப்பின் மூலம் செல்போன் நிறுவனங்கள், ஆதார் தகவல்களை கேட்க முடியாது.
- உங்கள் வங்கி கணக்கையும் ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டிய கட்டாயமில்லை.
- பள்ளிகளும், படிக்கும் குழந்தைகளின் ஆதார் கார்டு குறித்தான தகவல்களை கேட்க முடியாது. அட்மிஷனின் போதும் ஆதார் தகவல்களைப் பெற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
- ஆதார் கார்டு, பான் கார்டுடன் இணைக்கப்பட வேண்டும்.