This Article is From Nov 30, 2018

கஜா புயல் பாதிப்பால் வருத்தமடைந்த அமீர் கான்; நன்றி தெரிவித்த கமல்

மொழிகளைக் கடந்து பல்வேறு பிரபலங்கள் கஜா புயல் பாதிப்பு குறித்து வருத்தம் தெரிவித்து வருகின்றனர்

கஜா புயல் பாதிப்பால் வருத்தமடைந்த அமீர் கான்; நன்றி தெரிவித்த கமல்

கஜா புயல் பாதிப்பால் வருத்தம் அடைந்ததாக இந்தி நடிகர் அமீர் கான் கூறியுள்ளார். அவரது இந்த பதிவுக்காக கமல்ஹாசன் நன்றி தெரிவித்திருக்கிறார்.

கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நிவாரண பணிகள் முழு வீச்சில் நடந்து வரும் நிலையில், புயல் பாதிப்புகளை மத்திய குழு ஒன்று மதிப்பிட்டுச் சென்றுள்ளது.

நிவாரண பணிகளை பல்வேறு தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர். வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் கஜா புயல் நிவாரண நிதிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கஜா புயல் பாதிப்பு குறித்து இந்தி நடிகர் அமீர்கான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் தனது பதிவில், தமிழ்நாட்டில் கஜா புயலின் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பை அறிந்து கவலை அடைந்தேன். புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு சகோதர சகோதரிகளுக்கு நாம் உதவியாக இருக்க வேண்டும். நம்மால் எந்தவகையில் முடியுமோ அவ்வாறான உதவிகளை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

அமீர் கானின் இந்த பதிவுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். ட்விட்டரில் கமல் வெளியிட்டுள்ள பதிவில், அமீர் கானுக்கு மிக்க நன்றி. உங்களைப் போன்றவர்கள் இந்தியா என்பது ஒரே நாடு என்பதை உணரச் செய்து வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
 

.