This Article is From Jan 15, 2019

“ஹிட்லர் ஜெர்மனிக்கு என்ன செய்தாரோ…”- பாஜக-வை விளாசும் கெஜ்ரிவால்

2014 ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், டெல்லியில் இருக்கும் 7 நாடாளுமன்றத் தொகுதியிலும் பாஜக வெற்றி பெற்றது.

“ஹிட்லர் ஜெர்மனிக்கு என்ன செய்தாரோ…”- பாஜக-வை விளாசும் கெஜ்ரிவால்

கெஜ்ரிவாலின் இந்த உரைக்கு பாஜக தரப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

New Delhi:

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “வரும் நாடாளுமன்றத் தேர்தலில் டெல்லியில் இருக்கும் 7 லோக்சபா தொகுதியிலும் பாஜக-வை ஆம் ஆத்மி கட்சி வீழ்த்தும்” என்று சூளுரைத்துள்ளார். 

டெல்லியில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கெஜ்ரிவால், “ஜெர்மனியில் ஹிட்லர் என்ன செய்தாரோ, அதற்கு சற்றும் சளைத்தது அல்ல மோடி தலைமையிலான பாஜக இந்தியாவுக்கு செய்து கொண்டிருப்பது. அமித்ஷாவே, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வென்றால் அடுத்த 50 ஆண்டுகளுக்கு அக்கட்சியே ஆட்சியில் இருக்கும் என்று பேசியுள்ளார். 

இதுதான் பாஜக-வின் திட்டம். ஹிட்லர், ஜெர்மனிக்கு செய்தது போன்றத் திட்டம். பாஜக, நமது சட்ட சாசனத்தை அழித்து, தேர்தல் என்ற ஒரு நடைமுறையை ஒழிக்க ப்ளான் செய்கிறது. மோடி மட்டும் மறுபடியும் ஆட்சிக்கு வந்தால், நமது சட்ட சாசனத்தை அழித்துவிட்டு, ஜனநாயகத்தைப் படுகுழியில் தள்ளிவிடுவார்” என்று ஆவேசமாக உரையாற்றினார். 

கெஜ்ரிவாலின் இந்த உரைக்கு பாஜக தரப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி இது குறித்துப் பேசுகையில், “நமது சட்ட சாசனம் குறித்து கொஞ்சம் தெரிந்திருந்தால் கூட ஒருவர் இப்படி பேச மாட்டார். டெல்லி மக்களை கெஜ்ரிவால் ஏமாற்றியதற்காக கண்டிப்பாக தண்டிக்கப்படுவார். 2015 ஆம் ஆண்டடில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பெரு வெற்றி பின்னரும் டெல்லி மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறிவிட்டது ஆம் ஆத்மி” என்று குற்றம் சாட்டினார்.

2014 ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், டெல்லியில் இருக்கும் 7 நாடாளுமன்றத் தொகுதியிலும் பாஜக வெற்றி பெற்றது. இந்த முறை நடக்கும் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

.