Read in English
This Article is From Nov 03, 2018

சிலைகளுக்கு பதிலாக கல்வி மற்றும் சுகாதாரத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும்: ஆம் ஆத்மி

உயரமான சிலைகளை நிறுவுவதற்கு பதிலாக, ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த மற்றும் வேலையின்மையை அரசு முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென்று ஆம் ஆத்மி கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Advertisement
இந்தியா

குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேலின் 182மீ சிலையை பிரதமர் மோடி சமீபத்தில் திறந்து வைத்தார்

Bhopal:

உலகின் மிக உயரமான சர்தார் வல்லபாய் படேலின் சிலையை சில தினங்களுக்கு முன் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்நிலையில் இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி கருத்தினை வெளியிட்டுள்ளது. அதில், உயரமான சிலைகளை நிறுவவுவதற்கு பதிலாக, கடினமாக உழைத்து மக்கள் கட்டும் வரிப்பணத்தைக் கொண்டு ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த மற்றும் வேலையின்மையை அரசு முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென்று ஆம் ஆத்மி கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப் உயரமான சிலையாக சர்தார் வல்லபாய் படேலின் சிலையை நிறுவிய பின், உத்திரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அயோத்தியில், 151மீட்டர் ராமர் சிலையை நிறுவப்போவதாக கூறியுள்ளார். இதுபோன்ற உயரமான சிலைகள் எழுப்புவதில் திடீரென்று போட்டி ஏற்பட்டுள்ளது என்று ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் மற்றும் ராஜ்ஜிய சபை எம்.பி சஞ்சய் சிங் கூறியுள்ளார்.

மேலும், இதுபோன்ற போட்டிகளால் நாட்டில் எந்த மாறுதலும் ஏற்பட போவதில்லை. நாளை வேறொருவர் டாக்டர் அம்பேத்கருக்கு 250 மீட்டரில் சிலை அல்லது 300 மீட்டரில் மகாரானா பிரதாப் சிலையை நிறுவலாம் என்று சஞ்சய் சிங் கூறினார்.

Advertisement

மத்திய பிரதேசத்தில் எந்தக் கட்சி வெற்றி பெறும் என்பது குறித்து கேட்ட போது, தங்களது கட்சிக்கு பிரகாசமான வாய்ப்பு இருப்பதாக கூறினார். மேலும், மத்திய பிரதேச ஆளும் பாஜகவிற்கு மாற்று காங்கிரஸ் கட்சி இல்லை என்று அவர் கூறினார்.

ஆம் ஆத்மி கட்சி ம.பி ஆட்சிக்கு வந்தால் டெல்லி போன்று ம.பியிலும் மின்சாரம், நீர், சுகாதாரம் மற்றும் கல்வியை முன்னேற்றப்பாதைக்கு கொண்டு செல்வோம் என்று கூறினார்.

Advertisement
Advertisement