ஹைலைட்ஸ்
- பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் கூட்டணியில் ஆம் ஆத்மி இடம்பெறாது
- இக்கட்சிகளுக்கு நாட்டின் வளர்ச்சில் எப்பங்கும் இல்லை
- 2019 பொதுத்தேர்தல்களில் ஆம் ஆத்மி அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடும்
Jind: "2019 நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அமைந்துவரும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் ஆம் ஆத்மி இணையாது" என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் தெரிவித்தார். ஹரியாணா மாநிலம் ரோடக்கில் செய்தியாளர்களைச் சந்திக்கையில் இதனை அவர் தெரிவித்தார். "பாஜகவுக்கு எதிராக அமைக்கவுள்ள கூட்டணியில் இடம்பெறப்போகும் கட்சிகள் நாட்டின் வளர்ச்சியில் எந்தப் பங்கும் ஆற்றியது இல்லை. அத்தகைய கட்சிகளின் கூட்டணியில் ஆம் ஆத்மி சேராது" என்றார்.
எனினும் ஹிரியாணா சட்டமன்றத் தேர்த்தலிலும் 2019 பொதுத் தேர்தலிலும் அனைத்து தொகுதிகளிலும் தமது ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என்றும் அவர் கூறினார். மேலும், "புது தில்லியில் பல பணிகள் முடிவுறாமல் இழுப்பதற்கு ஆளும் மோடி அரசே காரணம்" என்றும் கேஜ்ரிவால் குற்றம்சாட்டினார். "மக்களின் நலனுக்காகத் நாங்கள் எந்த நடவடிக்கை எடுத்தாலும் மத்திய அரசு அதற்கு முட்டுக்கட்டை போடுகிறது" என்றும் அவர் புகார் தெரிவித்தார்.
"கல்வி, சுகாதாரத் துறைகளில் எங்களது அரசு புரட்சி செய்துள்ளது. ஆனால் அண்டையிலுள்ள ஹிரியாணா மாநிலமோ வளர்ச்சிப் பணிகளில் பின்தங்கியுள்ளது. ஹரியாணாவின் முதல்வர் மனோகர் லால் கட்டர் எங்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும். முழு மாநில அரசுக்கான அதிகாரம் இல்லாதபோதே கல்வி, சுகாதாரம், மின்சாரம், குடிநீர் விநியோகம் போன்ற துறைகளில் நாங்கள் இத்தனை சாதனைகளை நிகழ்த்தியுள்ளபோது ஹரியாணாவால் ஏன் செய்யமுடியாமல் போகிறது?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
ஜம்மு காஷ்மீரில் அண்மையில் தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்கும்போது உயிரிழந்த ஹரியாணாவின் அம்பாலா மாவட்டத்தைச் சேர்ந்த இராணுவ வீரரின் குடும்பத்துக்கு ஒரு கோடி இழப்பீடு அளிக்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.