Read in English বাংলায় পড়ুন
This Article is From Aug 10, 2018

ஆருஷி கொலை வழக்கு: சிபிஐ மேல் முறையீடுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல்!

சிபிஐ நீதிமன்றத்தால் ஆருஷி கொலை வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் ஆருஷியின் பெற்றோர்களான ராஜேஷ், நுபுர் தல்வார்

Advertisement
இந்தியா
New Delhi:

ஆருஷி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த அவரின் பெற்றோர்களான ராஜேஷ் மற்றும் நுபுர் தல்வார் ஆகியோருக்கு எதிரான மேல் முறையீடு வழக்குக்கு சிபிஐ, உச்ச நீதிமன்றத்தில் ஒப்புதல் கோரி இருந்தது. தற்போது அதற்கான ஒப்புதலை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

சிபிஐ நீதிமன்றத்தால் ஆருஷி கொலை வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் ஆருஷியின் பெற்றோர்களான ராஜேஷ் மற்றும் நுபுர் தல்வார். ஆனால், இதற்கு எதிராக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் அவர்கள் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் கடந்த அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி, தல்வார் தம்பதிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம். அதையடுத்து, அவர்கள் விடுவிக்கப்பட்டனர். 

பின்னர், அவர்களின் விடுதலைக்கு எதிராக மேல் முறையீடு செய்ய சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் ஒப்புதல் கோரியது. அதற்குத்தான் தற்போது உச்ச நீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது.
 

Advertisement
Advertisement