This Article is From Nov 19, 2019

ரயில்களில் தொங்கிய படி பயணம் செய்பவர்களை எச்சரிக்கும் ‘சின்னப்பொண்ணு’ நாய்!

ரயில்வே தண்டவாளங்களை கடந்து பிளாட்பார்மில் ஏற முயற்சிப்பவர்களையும், ஓடும் ரயிலில் ஏற அல்லது இறங்க முயற்சிப்பவர்களையும், படிக்கட்டுகளில் தொங்கிய படி பயணிப்பவர்களையும் குறைத்து எச்சரிக்கிறது.

ரயில்களில் தொங்கிய படி பயணம் செய்பவர்களை எச்சரிக்கும் ‘சின்னப்பொண்ணு’ நாய்!

The dog joins the Railway Protection Force personnel at the platform and patrols the area.

Chennai:

உரிமையாளரால் கைவிடப்பட்ட நாய் ஒன்று சென்னை பூங்கா ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் பாதுகாவலராக மாறி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. 

இதுதொடர்பாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறும்போது, அந்த நாய், ரயில்வே பாதுகாப்பு படையினருடன் இணைந்து பளாட்பாரத்தில் இருந்த படி, அந்த பகுதியை கண்காணித்து வருகிறது என்கின்றனர்.

இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில், சென்னை ரயில் நிலையத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்பு உரிமையாளரால் கைவிடப்பட்ட சின்னப்பொண்ணு நாய், ரயில்வே போலீசாருடன் இணைந்து ரயில்வே தண்டவாளங்களை கடந்து பிளாட்பார்மில் ஏற முயற்சிப்பவர்களையும், படிக்கட்டுகளில் தொங்கிய படி பயணிப்பவர்களையும் குறைத்து எச்சரிக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளது. 
 


தினசரி அந்த வழியே செல்லும் பயணி ஒருவர் கூறும்போது, அந்த நாய், ரயில்வே தண்டவாளங்களை கடந்து பிளாட்பார்மில் ஏற முயற்சிப்பவர்களையும், ஓடும் ரயிலில் ஏற அல்லது இறங்க முயற்சிப்பவர்களையும், படிக்கட்டுகளில் தொங்கிய படி பயணிப்பவர்களையும் குறைத்து எச்சரித்து, பொதுமக்களுக்கு நல்லது செய்து வருகிறது என்கிறார். 

இரண்டு ஆண்டுகளாக அந்த ரயில் நிலையத்தை சுற்றி வரும் சின்னப்பொண்ணு, இதுவரை யாருக்கும் எந்த தொந்தரவும் அளித்ததில்லை என்கின்றனர் அப்பகுதியை சேர்ந்தவர்கள். 
 

.