Read in English বাংলায় পড়ুন
This Article is From Mar 02, 2019

பாகிஸ்தான் அதிகாரிகளால் அபிநந்தன் மன ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக தகவல்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அறிவிப்பை தொடர்ந்து, விங் கமாண்டர் அபிநந்தன் நேற்றிரவு 9.20-க்கு விடுவிக்கப்பட்டார்.

Advertisement
இந்தியா Edited by

பாகிஸ்தான் கஸ்டடியில் அபிநந்தன் 60 மணி நேரம் வைக்கப்பட்டிருந்தார்.

New Delhi:

பாகிஸ்தான் அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்ட விங் கமாண்டர் அபிநந்தன் மனரீதியாக துன்புறுத்தப்பட்டார் என ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 60 மணி நேரம் அவரை சிறை வைத்திருந்த பாகிஸ்தான் அதிகாரிகள் அவரை, மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளதாகவும் கூறியுள்ளது.

புதன் கிழமை, பாகிஸ்தான் விமானப்படையுடன் சண்டையிட்ட போது, விங் கமாண்டர் அபினந்தன் சென்ற மிக்-21 ரக போர் விமானம், சுட்டு வீழ்த்தப்பட்டது. இதனால், அபினந்தன் பாகிஸ்தான் எல்லைக்கு உட்பட்ட இடத்தில் பாராஷூட் மூலம் தரையிறங்கினார். பாகிஸ்தான் ராணுவம், அவரை கைது செய்தது.

அவர் அந்நாட்டு அரசின் பிடியில் சுமார் 60 மணி நேரம் இருந்தார். இதையடுத்து, நேற்று இரவு 9:20 மணி அளவில் இந்தியாவிடம் அபினந்தனை ஒப்படைத்தது பாகிஸ்தான்.

Advertisement

எந்த நிபந்தனையுமின்றி பாகிஸ்தான் பிடியில் இருக்கும் இந்திய விமானியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியவந்த நிலையில், நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானி அபினந்தனை விடுவிப்பதாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான்கான் அறிவித்தார் அதன் தொடர்ச்சியாக அபிநந்தன் விடுவிக்கப்பட்டார்.

அபினந்தனின் வீரத்தைப் பறைசாற்றும் விதமாக கடந்த இரண்டு நாட்களாக இந்திய அளவில் #WelcomeBackAbhi என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டாகியது.

Advertisement

இந்த நிலையில் தற்போது அபிநந்தனை மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார்.

Advertisement