பாகிஸ்தானில் இருந்து கடந்த வெள்ளியன்று அபினந்தன் விடுவிக்கப்பட்டார்.
Coimbatore: google news, today news, tamil news, ndtv news, flash news, breaking news, news in tamil
அபிநந்தன் உடல்நலம் குணம் அடைந்து விட்டால் அவர் மீண்டும் போர் விமானத்தில் பைலட்டாக உடனடியாக இணைவார் என்று விமானப்படை தளபதி பி.எஸ். தனோவா தெரிவித்துள்ளார்.
மேலும், அபிநந்தன் போர் விமானத்தை இயக்க அனுமதிக்கப்படுவது அவரது உடல்தகுதியை பொருத்ததாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத தாக்குதலை அடுத்து ஜம்மு - காஷ்மீரின் எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் கடந்த மாதம் 14ம் தேதி முதல் பதற்றம் நிலவி வருகிறது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாம்கள் மீது இந்திய விமானங்கள் கடந்த மாதம் 26ம் தேதி குண்டு வீசின. மறுநாள் 27ம் தேதி, இந்திய பகுதியில் பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்குதல் நடத்த வந்தன. அப்போது இந்திய போர் விமானங்கள் குறுக்கிட்டு அவற்றை விரட்டின.
இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் எப்-16 ரக போர் விமானமும், இந்திய விமானி அபிநந்தன் சென்ற மிக்-21 பைசன் ரக விமானம் சுடப்பட்ட நிலையில், பாராசூட் மூலம் உயிர் தப்பி, அந்நாட்டு எல்லையில் விழுந்தார். அவரை கைது செய்த பாகிஸ்தான் ராணுவம், 2 நாள் சிறை பிடித்து வைத்திருந்தது. பின்னர், சர்வதேச நாடுகளின் அழுத்தத்தை தொடர்ந்து அபிநந்தன் கடந்த வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சில பரிசோதனைகளுக்காகவும், சிறப்பு சிகிச்சைக்காவும் அனுமதிக்கப்பட்டுள்ளார். அபினந்தனை விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர் சுபாஷ் ராவ் பாம்ரே ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர். அபிநந்தன் நல்ல மனநிலையிலும், உற்சாகமாகவும் இருக்கிறார் என்று கூறினார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த விமானப்படை தளபதி பி.எஸ். தனோவா கூறும்போது,
அபினந்தனுக்கு தேவையான அனைத்து வகையான சிகிச்சைகளும் அளிக்கப்படும். மீண்டும் பணியில் சேர்வதற்கான முழு உடல்தகுதி உள்ளது என்பது தொடர்பான மருத்துவ சான்றிதழ் எங்களுக்கு கிடைத்தவுடன், அவர் போர் விமானத்தை இயக்க அனுமதிக்கப்படுவார் என்று தெரிவித்தார்.