This Article is From Aug 28, 2019

பீகாரில் கொடூரம்: வீட்டிற்குள் புகுந்து குடும்பத்தினர் மீது ஆசிட் வீச்சு!

இன்று காலை நந்த கிஷோர் வீட்டிற்குள் ஆவேசமாக உள்ளே நுழைந்த கும்பல் ஒன்று உள்ளிருந்த குடும்பத்தினர் மீது ஆசிட் வீசியது.

பீகாரில் கொடூரம்: வீட்டிற்குள் புகுந்து குடும்பத்தினர் மீது ஆசிட் வீச்சு!

பீகாரின் வைஷாலி மாவட்டத்தில் குடும்பத்தினர் 16 பேர் மீது ஆசிட் வீசப்பட்டுள்ளது.

Patna:


பீகாரில் வீட்டிற்குள் புகுந்து குடும்பத்தினர் மீது இளைஞர்கள் சிலர் ஆசிட் வீசியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பீகாரின் வைஷாலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இளம்பெண் ஒருவருக்கு சில இளைஞர்கள் தொல்லை கொடுத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் அந்த இளைஞர்களை தட்டி கேட்டுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் அந்த பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து, உள்ளிருந்த குடும்பத்தினர் 16 பேர் மீது ஆசிட் வீசியுள்ளனர். 

இதில், 8 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, நந்த கிஷோர் பகத் குடும்பத்தினருக்கு சிலருடன் முன்பகை இருந்துள்ளது. இதனால், இன்று காலை நந்த கிஷோர் வீட்டிற்குள் ஆவேசமாக உள்ளே நுழைந்த கும்பல் ஒன்று உள்ளிருந்த குடும்பத்தினர் மீது ஆசிட் வீசியது. 

இதைத்தொடர்ந்து, இருதரப்பினரிடையே பெரும் வன்முறை நிகழ்ந்துள்ளது. எனினும், தற்போது இருதரப்புக்கும் இடையே அமைதி நிலவியுள்ளது. இந்த ஆசிட் வீச்சு சம்பவத்தால் அந்த குடும்பத்தில் இருந்த 2 பெண்கள் உட்பட 8 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் ஹாஜிப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். 

20 பேர் கொண்ட கும்பல் இந்த ஆசிட் வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 

.