This Article is From Apr 22, 2020

சுகாதார பணியாளர்களை வீடுகளை காலி செய்ய சொன்னால் நடவடிக்கை: தமிழக அரசு

இதுபோன்ற செயல்கள் பொது சேவையில் ஈடுபடுவோரை பணி செய்ய விடாமல் தடுக்கும் வகையிலானது .

சுகாதார பணியாளர்களை வீடுகளை காலி செய்ய சொன்னால் நடவடிக்கை: தமிழக அரசு

சுகாதார பணியாளர்களை வீடுகளை காலி செய்ய சொன்னால் நடவடிக்கை: தமிழக அரசு

ஹைலைட்ஸ்

  • சுகாதார பணியாளர்களை வீடுகளை காலி செய்ய சொன்னால் நடவடிக்கை
  • பொது சேவையில் ஈடுபடுவோரை பணி செய்ய விடாமல் தடுக்கும் வகையிலானது
  • புகார்கள் வரும் பட்சத்தில் சட்ட ரீதியில் உடனடி நடவடிக்கை

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் சுகாதாரப் பணியாளர்களிடம் வீடுகளை காலி செய்யுமாறு நிர்ப்பந்தித்தால் உரிமையாளர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. 

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் உருவெடுத்த கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கும் பரவி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,000ஐ நெருங்கியுள்ளது. வைரஸ் பாதிப்புக்கு மொத்தமாக 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

இந்தியாவில் கொரோனா பாதித்த மாநிலத்தில் தமிழகம் 5-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் 1,596 பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 18 பேர் உயிரிழந்த நிலையில் 635 பேர் குணமடைந்துள்ளனர். இதற்கிடையே, கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு வரும் மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, வாடகை வீட்டில் வசிக்கும் சுகாதார பணியாளர்களை வீட்டை விட்டு காலி செய்ய வீட்டு உரிமையாளர்கள் நிர்ப்பந்தம் செய்வதாக தமிழக அரசுக்கு புகார் வந்த வண்ணம் உள்ளது. 

இந்நிலையில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் சுகாதாரப் பணியாளர்களிடம் வீடுகளை காலி செய்யுமாறு நிர்ப்பந்தித்தால் உரிமையாளர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. 

இதுதடொர்பான அறிவிப்பில், இதுபோன்ற செயல்கள் பொது சேவையில் ஈடுபடுவோரை பணி செய்ய விடாமல் தடுக்கும் வகையிலானது எனவும், அவ்வாறு வற்புறுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு எச்சரித்திருந்தது.

மேலும், புகார்கள் வரும் பட்சத்தில் சட்ட ரீதியில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது

.