This Article is From Nov 27, 2019

பாதுகாப்பு மறுக்கப்பட்டதால் சபரிமலைக்குள் நுழையும் திட்டத்தை கைவிட்ட திருப்தி தேசாய்

“ எங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காவல்துறை எங்களிடம் கூறியது. அதனால் நாங்கள் திரும்பிச் செல்ல முடிவு செய்துள்ளோம். ஆனால் தொடர்ந்து போராடுவோம்” என்று கூறியுள்ளார்.

பாதுகாப்பு மறுக்கப்பட்டதால் சபரிமலைக்குள் நுழையும் திட்டத்தை கைவிட்ட திருப்தி தேசாய்

கடந்த ஆண்டு சபரிமலைக்குள் நுழைய திருப்தி தேசாய் முயற்சித்தார்

Kochi:

சபரி மலையில் பெண் பக்தர்கள் 10 வயது முதல் 50 வயது வரை நுழைவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இந்நிலையில் உச்ச நீதிமன்றம் சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவது குறித்த வழக்கினை 7 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றியுள்ளது அதே நேரம் சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய பெண்கள் அனுமதிக்கப்படும் என்று பிறப்பித்த உத்தரவும் அமலில் உள்ளது. 

தற்போது சபரிமலை நடை மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டு உள்ளது. அதே நேரம் சபரிமலைக்கு வரும் இளம் பெண்களை காவல்துறையினர் திருப்பி அனுப்பி வருகின்றனர். இந்நிலையில் புனேயைச் சேர்ந்த பெண் ஆர்வலான திருப்திதேசாய் தலைமையில் 5 பேர் சபரிமலைக்கு செல்ல விரும்புவதாகவும் அதற்கு பாதுகாப்பு கோரியும் கேரள மாநில காவல்துறையிடம் கோரிக்கை வைத்தனர்.  

ஆனால் காவல்துறை பாதுகாப்பு தர மறுத்து விட்டது. இந்நிலையில் திருப்தி தேசாய், “ எங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காவல்துறை எங்களிடம் கூறியது. அதனால் நாங்கள் திரும்பிச் செல்ல முடிவு செய்துள்ளோம். ஆனால் தொடர்ந்து போராடுவோம்” என்று கூறியுள்ளார்.  

இதற்கு முன் காவல்துறையின் பாதுகாப்புடன் சபரிமலைக்கு சென்ற பிந்துவின் போது மிளகாய் பொடி ஸ்பிரேயும் வலதுசாரி அமைப்பினைச் சேர்ந்த ஒருவர் அடித்தார். காவல்துறை அவரை கைதும் செய்தது. 

.