This Article is From Aug 28, 2018

பிரதமரைக் கொல்ல திட்டம் தீட்டியதாக 5 பேர் கைது : முக்கிய 10 குறிப்புகள்

பிரதமரைக் கொல்ல திட்டம் தீட்டப்பட்டிருந்த கடிதத்தில் இருந்த வரவரா ராவின் பெயரை வைத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்

New Delhi:

பிரதமர் மோடியை கொல்லத் திட்டம் தீட்டியதாக கிடைத்த செய்தியினால், பூனா உட்பட 6 நகரங்களில் பலத்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்புடையதாக கூறி 5 சமூக செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த முக்கிய 10 குறிப்புகள்

  1. பிரதமர் மோடியைக் கொல்ல திட்டம் தீட்டியதாக மாவோயிஸ்ட் கொள்கைகள் சார்ந்து எழுதும் எழுத்தாளர் வரவரா ராவ் கைது செய்யப்பட்டுள்ளார். ஜூன் மாதம் நடந்த பீமா கோரேகான் வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பேரில், ஒருவரின் வீட்டில், பிரதமரைக் கொல்ல திட்டம் தீட்டப்பட்டிருந்த கடிதத்தில் இருந்த வரவரா ராவின் பெயரை வைத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
  2. ஃபரிதாபாத்தில் இருந்த மனித உரிமை வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், மும்பையில் இருந்த சமூக செயல்பாட்டாளர்கள் வெர்னான் கோன்சர்வல், அருன் பெரெய்ரா ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  3. ராஞ்சியில் உள்ள சுதன் சுவாமி கைது செய்யப்பட்டுள்ளார். அவரது மடிக்கணினி, முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
  4. வழக்கறிஞர்கள், சமூக செயல்பாட்டாளர்களை கைது செய்ததற்கு எழுத்தாளர் அருந்ததி ராய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் "கும்பல் கொலையில் ஈடுபடுபவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், நியாயத்திற்காக வாதாடும், பெரும்பான்மை இந்துக்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் மக்களை குற்றவாளி என கூறுவதை ஒப்புக் கொள்ள முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
  5. பீமா கொரிகோன் போரின் 200ஆம் ஆண்டு நினைவு தினம் இந்த ஆண்டு நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில், வன்முறை தூண்டும் வகையில் பேசியதாக கூறி சுதிர் தவாலே, சுரேந்திர கட்லிங், மகேஷ் ரவுத், ரோனா வில்சன், ஷோமா சென் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
  6. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தலித் சமூகத்தை சேர்ந்த மக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மொத்தம், 3 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
  7. பெரும் கூட்டத்தை சந்தித்த இந்நிகழ்ச்சியில், குஜராத் வழக்கறினர் ஜிக்னேஷ் மேவானி கலந்து கொண்டார்.
  8. அதனை தொடர்ந்து. நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த தலித் அமைப்பினருக்கும், வலது சாரிகளுக்கும் மோதல் ஏற்பட்டது.
  9. கலவரமாக மாறிய மோதல், மும்பை நகரத்தில் உள்ள சில பகுதிகளுக்கும் பரவியது. அதில், ஒருவர் பலியானார், பலரும் காயமடைந்தனர்.
  10. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் கடை அடைப்பு நடத்த கோரி அழைப்பு விடுத்தனர். பின்னர், மதவாத வன்முறைக்கு மகாராஷ்டிராவில் இடமில்லை என்று கூறி முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் எச்சரிக்கை விடுத்தார்.

.