This Article is From Oct 22, 2018

அர்ஜுனுக்கு எதிராக பாலியல் புகார் கூறும் நடிகை ஸ்ருதி..!

என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை. இது போன்ற தவறான குற்றச்சாட்டுகளை கேட்க அதிர்ச்சியாக உள்ளது

Advertisement
Tamil Nadu Posted by

நடிகர் அர்ஜுனுக்கு எதிராக பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார் கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன்.

இது குறித்து பேச பெங்களூருவில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்திருந்த ஸ்ருதி, '2016 ஆம் ஆண்டு நானும் நடிகர் அர்ஜுனும் ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தோம். அப்போது அவர் என்னிடம் அனைவருக்கும் முன்னால் அநாகரிகமாக நடந்து கொண்டார். அப்போது திரைப்படத் துறையில் விசாரணை கமிட்டி இல்லை. அதனால் என்னால் யாரிடமும் அது குறித்து கூற முடியவில்லை. கன்னட திரைத் துறையில் இந்த மாதிரி விஷயங்கள் குறித்து விசாரிக்க ஒரு ஆணையம் தேவை

இந்த விஷயம் குறித்து நான் தெரிவித்த பிறகு, அர்ஜுன் ரசிகர்களிடமிருந்து எனக்கு தொடர்ந்து மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது. சூப்பர் ஸ்டார் என்று சொல்லிக் கொள்ளும் பலர் இதைப் போன்று தான் தரக்குறைவான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்' என்று தெரிவித்தார்.

இந்த குற்றச்சாட்டு குறித்து அர்ஜுன், ‘என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை. இது போன்ற தவறான குற்றச்சாட்டுகளை கேட்க அதிர்ச்சியாக உள்ளது' என்று கூறியுள்ளார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement
Advertisement