This Article is From Nov 30, 2019

மெமரி கார்டு அல்லது பென் டிரைவில் உள்ள உள்ளடக்கத்தை ஆவணமாக கருத முடியும் - உச்ச நீதிமன்றம்

மலையாள நடிகர் திலீப் அளித்த மனுவில் வழங்கிய தீர்ப்பில் குற்றவியல் வழக்கில் அரசு தரப்பு மெமரி கார்டு மற்றும் பென் டிரைவின் உள்ளடக்கங்களை ஆவணமாக கருதினால் அதனை குற்றம் சாட்டப்பட்டவருக்கு உள்ளடக்கத்தின் குளோன் செய்யப்பட்ட நகலை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது.

மெமரி கார்டு அல்லது பென் டிரைவில் உள்ள உள்ளடக்கத்தை  ஆவணமாக கருத முடியும்  - உச்ச நீதிமன்றம்

நடிகர் திலீப் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். மெமரி கார்டின் நகலை வழங்க வேண்டுமென கோரியிருந்தார் (File)

New Delhi:

மெமரி கார்டு அல்லது பென் டிரைவ்வில் உள்ள உள்ளடக்கங்களை மின்னணு பதிவுவுகளை  இந்திய ஆதார் சட்டத்தின் கீழ்  ‘சாட்சி ஆவணமாக' கருத வேண்டுமென உச்ச நீதிமன்றம்  தெரிவித்துள்ளது. 

மலையாள நடிகர் திலீப் அளித்த மனுவில் வழங்கிய தீர்ப்பில் குற்றவியல் வழக்கில் அரசு தரப்பு மெமரி கார்டு மற்றும் பென் டிரைவின் உள்ளடக்கங்களை ஆவணமாக கருதினால் அதனை குற்றம் சாட்டப்பட்டவருக்கு  உள்ளடக்கத்தின் குளோன் செய்யப்பட்ட நகலை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது. 

2017ஆம் ஆண்டு நடிகையை கடத்தி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கி அதனை கேமராவும் செய்திருந்த  செல்போன் ஆவணத்தை கேரள உயர்நீதி மன்றம் குற்றம் சாட்டப்பட்ட தரப்பான திலீப்புக்கு வழங்க மறுத்தது.  இதனை எதிர்த்து  நடிகர் திலீப் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். மெமரி கார்டின் நகலை வழங்க வேண்டுமென கோரியிருந்தார். ஆனால் பாதிக்கப்பட்டவரின் அடையாளம் காரணமாக ஆவணங்களை வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. 

தற்போது வழங்கப்பட்ட தீர்ப்பில் “மெமரி கார்டு அல்லது பென் டிரைவ்வில் உள்ள உள்ளடக்கத்தை குற்றம் சாட்டப்பட்டவர் தரப்புக்கு உரிய பாதுகாப்பு மற்றும் சோதனையில் அடிப்படையில் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது.  இதற்கான வழிமுறைகளை நீதிமன்றமே வழங்க வேண்டுமெனவும் தீர்ப்பு வழங்கப்பட்ட தேதியிலிருந்து 6 மாதங்களுக்குள் வழக்கின் விசாரணையை உடனடியாக முடிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. கேரள உயர்நீதிமன்றம் இந்திய சான்றுகள் சட்டதின் படி மெமரி கார்டு அல்லது பென் டிரைவில் இருக்கக்கூடிய உள்ளடக்கத்தை ஆவணமாக கருத முடியாது என்றும் அதனை குற்றம் சாட்டப்பட்டவருக்கு வழங்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது. 

.