This Article is From Dec 28, 2018

வரி செலுத்தாததால் பிரபல நடிகர் மகேஷ் பாபுவின் வங்கி கணக்குகள் முடக்கம்

ஒரு நிறுவனத்தின் விளம்பர தூதராக கடந்த 2007-2008-ல் மகேஷ் பாபு நியமிக்கப்பட்டிருந்தபோது சேவை வரி கட்டவில்லை என்பதால் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.

வரி செலுத்தாததால்  பிரபல நடிகர் மகேஷ் பாபுவின் வங்கி கணக்குகள் முடக்கம்

முடக்கம் செய்யப்பட்ட வங்கி கணக்குகளை மகேஷ் பாபுவால் பயன்படுத்த முடியாது.

Hyderabad:

சேவை வரி கட்டாததா பிரபல நடிகர் மகேஷ் பாபுவின் வங்கி கணக்கை முடக்கி ஜி.எஸ்.டி. துறை நடவடிக்கை எடுத்துள்ளது. வட்டியும் முதலுமாக அவரிடம் இருந்து பணம் பெறப்படவுள்ளது.

மகேஷ் பாபு பிரபல தெலுங்கு நடிகராக இருந்து வருகிறார். அவர் கடந்த 2007-08-ல் ஒரு நிறுவனத்தின் விளம்பரத் தூதராக செயல்பட்டு வந்தார். இதற்காக அவர் சேவை வரி ஏதும் கட்டவில்லை என்று வரிகளை வசூலிக்கும் ஜி.எஸ்.டி. துறை தெரிவித்துள்ளது.

இதனை கண்டுபிடித்ததை தொடர்ந்து மகேஷ் பாபுவின் ஆக்சிஸ் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கணக்குகளை ஜி.எஸ்.டி. துறை முடக்கம் செய்துள்ளது.

சேவை வரியாக மகேஷ்பாபு ரூ. 18.5 லட்சத்தை செலுத்த வேண்டும். இதற்கு வட்டி, அபராதம் என மொத்தம் ரூ. 73.5 லட்சத்தை ஜி.எஸ்.டி. துறை பெறவிருக்கிறது.

ஜி.எஸ்.டி. அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து கூறும்போது, ''சேவை வரியை பெறுவதற்காக வங்கி கணக்குகளை முடக்கி வைத்துள்ளோம். மகேஷ் பாபுவின் ஆக்சிஸ் வங்கி கணக்கில் இருந்து ரூ. 42 லட்சத்தை பெற்றிருக்கிறோம். மீத தொகையை ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்படும். இதனை தராவிட்டால் அந்த வங்கிக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்'' என்றார்.
 

.