நடிகர் பிரகாஷ்ராஜ் பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் 2018ல் படுகொலை செய்யப்பட்டார். அவரின் மரணத்திற்கு பின் தீவிரமாக மத்தியில் ஆளும் பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். இவரின் விமர்சனத்துக்கு வலதுசாரி அரசியல் குழுக்கள் மற்றும் பாஜகவினர் பலரும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்த்தில் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். புதிய தொடக்கத்தில் பொறுப்புகள் அதிகரிக்கின்றன... உங்களின் ஆதரவுடன் இனி வரும் நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக நிற்பேன் என்று தெரிவித்துள்ளார்.
பிரகாஷ்ராஜ் வலதுசாரி அமைப்புகள் இல்லாத பிற கட்சிகளுக்கு தீவிரமாக தனது ஆதரவை தெரிவித்து வந்தார். தெலுங்கானா முதலமைச்சாரான கே. சந்திரசேகர் ராவ்விற்கு கூட தன் ஆதரவை தெரிவித்தார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பிரகாஷ் ராஜ் கே.சி.ஆர் மற்றும் தேவ் கவுடா ஆகியோருடன் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
பிரகாஷ்ராஜின் அறிவிப்பைத் தொடர்ந்து சுயோட்சையாக நின்றாலும் காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் தன்னுடைய ஆதரவைத் தெரிவிக்கலாம் எனத் தெரிகிறது.