This Article is From Feb 27, 2019

பாமக-வில் இருந்த விலகிய நடிகர் ரஞ்சித், அமமுக-வில் இணைந்தார்!

இன்று டிடிவி தினகரனின் நேரில் சந்தித்து அமமுக-வில் இணைந்துள்ளார். 

Advertisement
தமிழ்நாடு Written by

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவராக இருந்தவர் நடிகர் ரஞ்சித்

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவராக இருந்தவர் நடிகர் ரஞ்சித். சில மாதங்களுக்கு முன்னர்தான் துணைத் தலைவர் பதவி ரஞ்சித்துக்குக் கொடுக்கப்பட்டது. அதிமுக-வுடன் பாமக கூட்டணி வைத்ததைத் தொடர்ந்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியிலிருந்து நேற்று விலகிக் கொள்வதாக அறிவித்தார். இந்நிலையில், தற்போது டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் அவர் இணைந்துள்ளார். 

பாமக-விலிருந்து தான் விலகுவது ஏன் என்பது குறித்து நேற்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ரஞ்சித், ‘நல்ல கொள்கை இருக்கிறது என்று நம்பித்தான் பாமக-வில் இணைந்தேன். நான் சேர்ந்ததில் இருந்து கடுமையாக உழைத்தேன். ஆனால், பதவிக்காகவும் பணத்துக்காகவும் தற்போது பாமக, அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது. இது தமிழக மக்களை ஏமாற்ற பாமக போடும் நாடகம். 

இவ்வளவு நாள் தமிழக அரசின் செயல்பாடுகளை அடுக்கடுக்காக விமர்சித்துவிட்டு, அவர்களுடனேயே எப்படி போய் செர முடியும். பாமக-வில் இருக்கும் இளைஞர்களுக்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன்' என்று வேதனையுடன் கூறினார். 

Advertisement

இதையடுத்து, இன்று டிடிவி தினகரனின் நேரில் சந்தித்து அமமுக-வில் இணைந்துள்ளார். 

Advertisement