போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கடந்த திங்கட்கிழமை ரியா கைது செய்யப்பட்டார்
New Delhi: சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கோடு தொடர்புடைய போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நடிகர் ரியா சக்ரவர்த்திக்கு மும்பை நீதிமன்றம் இன்று ஜாமீன் மறுத்துள்ளது. அவரது சகோதரர் ஷோயிக் சக்ரவர்த்தி மற்றும் குற்றம் சாட்டப்பட்ட எட்டு பேரின் ஜாமீன் கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டன.
ரியா சக்ரவர்த்தி பைகுல்லா சிறையில் உள்ளார். அவருக்கு செப். 22 வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
தனது ஜாமீன் கோரிக்கையில், ரியா சக்ரவர்த்தி தனது வாக்குமூலத்தை வாபஸ் பெற்றதோடு, சுய-குற்றச்சாட்டு வாக்குமூலங்களை வழங்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், தான் எந்தவொரு குற்றமும் செய்யவில்லை, மேலும் இந்த வழக்கில் பொய்யாக தன்மீது குற்றம் சுமத்தப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
ரியா ஜாமீனில் விடுவிக்கப்பட்டால், ஆதாரங்களை சிதைத்து, சமூகத்தில் தனது நிலைப்பாட்டையும் பண சக்தியையும் பயன்படுத்தி சாட்சிகளை கலைக்கக்கூடும் என போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் கூறியுள்ளது. மேலும், "சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல்" தொடர்பான நிதி பரிவர்த்தனைகளை எளிதாக்க ரியா சக்ரவர்த்தி தனது கிரெடிட் கார்டு மற்றும் கட்டண நுழைவாயில்களைப் பயன்படுத்தியதாக போதைப்பொருள் தடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
ரியாவால் பெறப்பட்ட போதைப்பொருட்கள் தனிப்பட்ட நுகர்வையும் கடந்து பிறருக்கா வாங்கப்பட்டதாக கூறப்படுகின்றது. போதை மருந்து மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டம் பிரிவு 27A –ன் படி அவர் குற்றத்திலிருந்து தப்பிக்க முடியாது என போதைபொருள் தடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது.