Ambareesh Kannada Actor Death: மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரது உயிர் பிரிந்தது.
Bengaluru: கன்னட அரசியல்வாதியும், நடிகருமான அம்பரீஷ் நேற்று மாலை காலமானார் (Ambareesh Death). அவருக்கு வயது 66.
புரட்சி நடிகர் என பொருள்படும் ‘ரிபல் ஸ்டார்' என்று அழைக்கப்பட்ட அம்பரீஷ், நடிகராக தனது வாழ்க்கையை 1972-ல் தொடங்கினார். வில்லனாக விலம் வந்து கன்னட மக்கள் மனதில் நெருங்கிய இடத்தை பிடித்தார்.
சுமார் 40 ஆண்டுகளாக சினிமாத்துறையில் அம்பரீஷ் இருந்திருக்கிறார். அவர் நடித்த படங்கள் 200-யை கடந்துள்ளன. தனது நெருங்கிய நண்பரின் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், “மிகச் சிறந்த மனிதர்... என்னுடைய நெருங்கிய நண்பர்... இன்று உங்களை நான் இழந்து விட்டேன்... முழுவதும் பிரிந்து விட்டேன்... உங்களது ஆத்மா சாந்தி அடையட்டும்” என்று கூறியுள்ளார்.
கர்நாடகாவில் மாண்டியா மக்களவை தொகுதியின் எம்.பி.யாக இருந்த அம்பரீஷுக்கு முன்னாள் மன்மோகன் சிங்கின் அமைச்சரவையிலும் இடம் கிடைத்தது. எம்.எல்.ஏ.-வாக இருந்தபோதிலும், கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டதால் அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படவில்லை.
அம்பரீஷின் மறைவுக்கு (Ambareesh Death) 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது. முழு அரசு மரியாதையுடன் அவரது இறுதி சடங்குகள் நடைபெறவுள்ளன. பெங்களூருவின் ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்களும், விஐபிக்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.