Read in English
This Article is From Sep 23, 2019

ஆண் குழந்தைக்கு தாயான நடிகை எமி ஜாக்சன்! வைரலாகும் புகைப்படம்!!

தனது குழந்தைக்கு 'ஆன்ட்ரியாஸ்' என பெயர் சூட்டியுள்ளனர் ஜார்ஜ் - எமி ஜாக்சன் தம்பதியினர்.

Advertisement
Entertainment Edited by

தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்துள்ளார் எமி ஜாக்சன்.

New Delhi:

பிரபல நடிகை எமி ஜாக்சன் ஆண் குழந்தைக்கு தாயாகி உள்ளார். கணவர் மற்றும் குழந்தையுடனான அவரது புகைப்படம் இணைய தளங்களில் வைரலாகி வருகிறது. 

2010-ல் மதராச பட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் எமி ஜாக்சன். விஜய் இயக்கத்தில் ஆர்யாவுடன் அவர் நடித்த இந்த திரைப்படம் மெகா ஹிட் ஆனதை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் எமி கமிட் ஆனார். 

கணவர் மற்றும் குழந்தையுடன் எமி:

Advertisement

இதன்பின்னர் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இந்தி ரீமேக்கான ஏக் தீவானா தா படத்தில், பிரதீக் பாப்பருடன் இணைந்து நடித்தார். அப்போது பிரதீக்கும் எமியும் காதல் கொண்டதாக செய்திகள வெளியாகின. 
 

தொடர்ந்து தமிழில் தாண்டவம், தெலுங்கில் எவடு, இந்தியில் சிங் இஸ் பிலிங், தங்க மகன், கெத்து உள்ளிட்ட படங்களில் நடித்தார். 
 

Advertisement

Advertisement

2016-ல் விஜய்யுடன் தெறி படத்திலும், 2018-ல் ரஜினியுடன் 2.O படத்திலும் எமி ஜாக்சன் நடித்தார். அதன்பின்னர், காதலர் ஜார்ஜ் பனயிட்டோவுடன் டேட்டிங்கில் இருந்த எமி கர்பமுற்றார். 

இதன்பின்னர் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணைய தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தின. குறிப்பாக கர்ப காலத்தின்போதும் அவர் தினமும் ஜிம்முக்கு சென்றார். இதுதொடர்பாக அவரது புகைப்படங்கள் வைரலாக பரவியது. 

Advertisement

இந்த நிலையில் எமிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. அதற்கு ஜார்ஜ் - எமி தம்பதியினர் ஆன்ட்ரியாஸ் என பெயர் சூட்டியுள்ளனர். இதற்கு பலமானவர் என்று அர்த்தமாம். 

Advertisement