This Article is From Feb 19, 2019

‘’7-சீட்டில் தோற்றாலும் ஒரு எம்.பி. கன்ஃபார்ம்’’ – பாமகவை கலாய்க்கும் கஸ்தூரி

வரும் மக்களவைத் தேர்தலில் தமிழக ஆளும் கட்சியான அதிமுக-வின் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இடம்பெற உள்ளது.

‘’7-சீட்டில் தோற்றாலும் ஒரு எம்.பி. கன்ஃபார்ம்’’ – பாமகவை கலாய்க்கும் கஸ்தூரி

‘பாமக 4 சீட்டுக்கு இப்பிடி மாத்தி மாத்தி பேரம் பேசுறதுக்கு பேசாம அதிமுக திமுக  ரெண்டு கட்சியோடயும் தலா 2 சீட்டு கூட்டணி வச்சி புரட்சி பண்ணிரலாம்', கஸ்தூரி

ஹைலைட்ஸ்

  • இன்று அதிமுக- பாமக கூட்டணி உறுதியானது
  • ராமதாஸ், எடப்பாடி பழனிசாமி கூட்டணி உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்
  • உடன்படிக்கை கையெழுத்தானபோது அன்புமணி உடனிருந்தார்

வரும் மக்களவைத் தேர்தலில் தமிழக ஆளும் கட்சியான அதிமுக-வின் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இடம்பெற உள்ளது. அதற்கான உடன்படிக்கை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் இன்று கையெழுத்தானது. இந்நிலையில் இந்தக் கூட்டணி குறித்து நடிகை கஸ்தூரி, தனது சமூக வலைதளங்களில் இட்டு வரும் பதிவுகள் வைரலாகி வருகின்றன. 

பாமக, அதிமுகவுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து சலசலக்கப்பட்டு வந்தது. அப்போது கஸ்தூரி, ‘பாமக 4 சீட்டுக்கு இப்பிடி மாத்தி மாத்தி பேரம் பேசுறதுக்கு பேசாம அதிமுக திமுக  ரெண்டு கட்சியோடயும் தலா 2 சீட்டு கூட்டணி வச்சி புரட்சி பண்ணிரலாம். திராவிட அரசியலுக்கு மாற்று, டாஸ்மாக் கட்சிகளுக்கு எதிர்ப்பு, மாற்றம் முன்னேற்றம் எல்லாம் என்ன ஆச்சு?' என்று கேள்வி எழுப்பினார். 

இன்று கூட்டணி உறுதியனதைத் தொடர்ந்து, ‘எப்போதுமே பாமகவுக்கு தே.ஜ.கூ-வில்தான் அதிக சீட்டு கிடைக்கும். பாஜக கூட்டணியில் போன முறை மிக அதிகமாக 8 சீட்டுக்கள். வென்றது 1 மட்டுமே. இந்த முறை வென்றாலும் வெல்லாவிட்டாலும் ஒரு எம்.பி., பதவி நிச்சயம். வேறு என்ன வேண்டும்?' என்று கேலி செய்துள்ளார். 

முன்னதாக பாமக-வின் தொகுதி பங்கீடு குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘அதிமுக-விற்கும் பாமக-வுக்கும் இடையே இன்று ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக, 7 நாடாளுமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தீர்மானிகப்பட்டுள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

.