This Article is From Dec 02, 2019

“அம்மாவின் ஆசியோடு BJP-யில் இணைந்தேன்!”- மனம் திறந்த நடிகை Namitha!

Namitha Joins BJP - "நான் பாஜகவையம் அதன் நடவடிக்கையையும் கடந்த 3 ஆண்டுகளாக கவனித்து வருகிறேன்"

“அம்மாவின் ஆசியோடு BJP-யில் இணைந்தேன்!”- மனம் திறந்த நடிகை Namitha!

Namitha Joins BJP - “நான் அம்மாவின் (ஜெயலலிதாவின்) ஆசியோடு இன்று பாஜகவில் இணைந்துள்ளேன்"

Namitha Joins BJP - பிரபல நடிகை நமீதா, பாஜக-வில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். தான் பாஜக-வில் சேர்ந்ததற்கான காரணம் மற்றும் தன் எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்து விரிவாக அவர் பேசியுள்ளார். 

செய்தியாளர்கள் சந்திப்பில் நமீதா, “நான் அம்மாவின் (ஜெயலலிதாவின்) ஆசியோடு இன்று பாஜகவில் இணைந்துள்ளேன். எனக்கு எப்போதும் இரண்டு விஷயங்கள் முக்கியமானதாகப்படும். ஒன்று பெண்கள் முன்னேற்றம். இன்னொன்று குழந்தைகள் பாதுகாப்பு. இப்போது மூன்றாவதாக, விலங்குகளின் பாதுகாப்பையும் முன்வைத்து பொது வாழ்க்கையில் செயல்படுவேன். இந்த விஷயங்களுக்காக அம்மா பாடுபட்டார். 

நான் பாஜகவையம் அதன் நடவடிக்கையையும் கடந்த 3 ஆண்டுகளாக கவனித்து வருகிறேன். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் காரணமாகவே நான் பாஜகவில் இணைந்தேன்,” என்றவரிடம், “நமீதாவுக்குப் பட வாய்ப்புகள் குறைந்துவிட்டதாலேயே அரசியலுக்கு வந்துள்ளார் என்று சொல்லப்படகிறதே,” என்று ஒரு நிருபர் கேட்க,

“நான் எதற்காக அரசியலுக்கு வந்துள்ளேன் என்பதை தெளிவாக சொல்லிவிட்டேன். உங்கள் விருப்பப்படி நீங்கள் ஒரு கருத்தை சொல்கிறீர்கள். அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை,” என்றார் தீர்க்கமாக.

“தொடர்ச்சியாக நடிகர்கள் பலர் அரசியலுக்கு வருவது பற்றி,” என்று கேட்க, “நடிகர்களாக இருக்கும் பட்சத்தில் சுலபமாக பலதரப்பட்ட மக்களிடம் ஒரு விஷயத்தை எடுத்துச் செல்ல முடியும். நான் ஒரு அந்தஸ்து பெற்றுள்ளதால் ஒரு நல்ல விஷயத்தை என்னால் மக்களிடத்தில் சுலபமாக எடுத்துச் செல்ல முடியும் என்று நம்புகிறேன்,” என முடித்துக் கொண்டார். 

.