This Article is From Oct 31, 2018

“பாலியல் தொல்லைக்கு ஆளானேன் என்பதை உணர எனக்கு 17 வருடங்கள் ஆனது”பார்வதி!

எனக்கு பாலியல் தொல்லை நடந்ததை உணர 17 வருடங்கள் ஆனது. இப்போது அதை வெளியில் சொல்ல மேலும் 12 வருடங்கள் ஆகியுள்ளது.

“பாலியல் தொல்லைக்கு ஆளானேன் என்பதை உணர எனக்கு 17 வருடங்கள் ஆனது”பார்வதி!

மும்பையில் நடந்த ஜியோ MAMI பிலிம் பெஸ்டிவல் (Image courtesy: Instagram)

ஹைலைட்ஸ்

  • "நான் அதை கேட்கவில்லை; ஆனால், எனக்கு அது நடந்தது" - பார்வதி
  • நடிகை பார்வதி மலையாளம், தமிழ், கன்னடா என 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடி
  • 2017-ஆம் ஆண்டு இர்பான் கானுடன் நடித்த இந்தி திரைப்படம் வெளியானது
New Delhi:

நடிகை பார்வதி கடந்த செவ்வாய்கிழமை மும்பையில் நடந்த ஜியோ MAMI பிலிம் பெஸ்டிவலில் கலந்துக் கொண்டார். பார்வதிக்கு 4 அல்லது 5 வயது இருக்கும்போது பாலியல் தொல்லை நடந்தது. அதை உணர அவர்களுக்கு 17 வருடங்கள் ஆகியுள்ளது. அதை வெளியே சொல்வதற்கு இன்னும் 12 வருடங்கள் ஆகியுள்ளது" என்று அவர் கூறியதை ஐ.ஏ.என்.எஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இக் குறித்து பார்வதி கூறியதற்கு காரணம், இந்தியாவிலும் வெளிவந்துகொண்டிருக்கும் #MeToo சம்பவங்கள்தான். இதில் பல நடிகைகள் தங்களுக்கு நடந்த துயரச் சம்பவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஜியோ MAMI பிலிம் பெஸ்டிவலில் பேசிய பார்வதி கூறியதாவது, " அது நடந்தபோது நான் மிகவும் சிறிய குழந்தையாக இருந்தேன். எனக்கு பாலியல் தொல்லை நடந்ததை உணர 17 வருடங்கள் ஆனது. இப்போது அதை வெளியில் சொல்ல மேலும் 12 வருடங்கள் ஆகியுள்ளது. நான் அதை கேட்கவில்லை; ஆனால், எனக்கு அது நடந்தது" என்றார். 

"இந்தச் சம்பவம் குறித்து பேச எண்ணினேன். ஆனால் அதற்கு என்னுடைய பாலினம் தடையாக இருந்தது. பிறகு நான் ஒரு மனிதராக உட்கார்ந்து இந்தச் சம்பவம் பற்றி பேசுகிறேன், பாலின பேதங்கள் எல்லாம் பின்னே வரட்டும். இந்த விஷயங்களைக் கடக்க நான் நாள்தோறும் போராடிக் கொண்டிருக்கிறேன். இது ஒரு தினசரி போராட்டம். இதைக் கடக்க வேண்டும் என்று, முதலில் என் நண்பர்களுக்கு தெரியப்படுத்தினேன். பின்னர், என் பெற்றோர் என்னுடன் சேர்ந்து சமாளிக்க உதவினார்கள். இது ஒரு தினசரி பயிற்சியாக மாறிவிடும்" என்று பார்வதி கூறினார்.

நடிகை பார்வதி மலையாளம், தமிழ், கன்னடா என 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த முக்கியப் படங்கள், கன்னடத்தில் மிலனா, ஆந்தர் பகார், தமில் மரியான் மற்றும் பூ, மலையாளத்தில் பெங்களூர் டேஸ், என்னு என்டே மொயிதீன், டேக் ஆப். கடந்த ஆண்டு அவர் இர்பான் கானுடன் நடித்த இந்தி திரைப்படம் வெளியாகியுள்ளது.

#MeToo இயக்கம் இந்திய சினிமா துறையினரை விழுத்துகொள்ள செய்துள்ளது. முக்கியமாக தனுஶ்ரீது, நானா பட்கர் மீது கொடுத்த புகார் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது. பல நடிகைகள் தங்களுக்கு நடந்த பிரச்னைகளை #MeToo மூலம் வெளியில் கொண்டு வந்ததோடு, சினிமாவில் பதுங்கியிருந்தவர்களை வெளிகாட்ட உதவியுள்ளது. பாலிவுட்டில், அலோக் நாத் மற்றும் ரஜத் கபூர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளரான சுபாஷ் காய் மற்றும் சுஜித் கான் ஆகியோர் தங்களின் சக ஊழியர்களுக்கும், கலைஞர்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டனர்.

.