Priyanka Chopra in Tuscany (priyankachopra)
New Delhi: இணையத்தில் பிரியங்கா சோப்ரா வெளியிட்டிருக்கும் நீச்சல் உடை படங்கள்தான் தற்போதைய வைரல். இந்தியாவை சேர்ந்த 36 வயதான நடிகை பிரியங்கா சோப்ரா தன்னை விட சுமார் 10 வயது குறைவான பாப் பாடகர் நிக் ஜோனஸை திருமணம் முடித்தார்.
இதன்பின்னர் பிரியங்காவுக்கு இருக்கும் வரவேற்பு வேற லெவலுக்கு சென்றது. ஜோனஸ் - பிரியங்கா இடையிலான சுவாரசிய சமாசாரங்களை அறிந்து கொள்வதற்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் அவர்களைப் பற்றிய சிறிய செய்தியாக இருந்தாலும், இணையத்தில் அவை ட்ரெண்டாகி வருகின்றன.
தற்போது இந்த ஜோடி இத்தாலியில் விடுமுறையை கழித்து வருகிறது. நீச்சல் உடையில் பிரியங்கா கூலாக இருக்க அதனை க்ளிக் செய்துள்ளார் கணவர் நிக் ஜோனஸ். இதனை பிரியங்கா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
+
A post shared by Nick Jonas (@nickjonas) on
இந்த ஃபோட்டோக்கள் லட்சக்கணக்கான லைக்குகளை குவித்து வருகிறது. தற்போது வரை 16 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.