Hyderabad: ஹைதராபாத்: பன்ஜாரா மலைப்பகுதியில் நடைப்பெற்று வந்த 'ஹை-ப்ரோஃபைல்' விபச்சாரத்தில் இருந்து, திரைப்பட நடிகை மீட்பு.
பன்ஜாரா மலைப்பகுதியை சுற்றி உள்ள இடங்களில், விபச்சாரம் நடப்பதாக வந்த தகவலை அடுத்து சோதனையில் ஈடுபட்டனர் காவல் துறையினர். அப்போது அங்குள்ள ஒரு ஹோட்டலில் விபச்சாரம் நடப்பது கண்டுப் பிடிக்கப் பட்டது. இதனையடுத்து அந்தக் குழுவின் ஏற்பாட்டளரை காவல் துறையினர் கைது செய்தனர். இதில் ஈடுப்பட்டிருந்த ஆக்ராவை பூர்வீகமாக கொண்ட 24 வயது திரைப்பட நடிகையையும் காவல் துறையினர் மீட்டனர்.
கைது செய்யப்பட்ட ஜனார்தனன் ராவ் என்பவர், விபச்சார தொழில் ஏற்பாட்டாளராக தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக காவல் துறையினர் தெரிவித்தனர். மேலும், ஜனார்தனன் ராவுடன் தப்பிச் சென்ற அவரது கூட்டாளி ஆகியோர் மும்பையில் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து, திரைத்துறைக்கு அறிமுகமாகும் நடிகைகளை விபாச்சாரத்தில் ஈடுபட வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
விபச்சார தொழிலில் ஈடுபடும் நடிகைகளுக்கு வாரம் 1 லட்சம் ரூபாய் வரை அளிக்கப்படுகிறது, வாடிக்கையாளர்கள் விபச்சாரத்தில் ஈடுப்படுத்தப் படும் பெண்கள் என இருபுறமும் தலா 20,000 ரூபாயை இந்த ப்ரோக்கர்கள் பெற்று கொள்வதும் காவல் துறை விசாரனையில் தெரிய வந்துள்ளது.