This Article is From Oct 30, 2018

திரையரங்குகளில் அனுமதியின்றி கூடுதல் காட்சிகள் திரையிட தடை: உயர்நீதிமன்றம்

வரி ஏய்ப்பு செய்திருந்தால் அந்த திரையரங்கு எதிராக சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

திரையரங்குகளில் அனுமதியின்றி கூடுதல் காட்சிகள் திரையிட தடை: உயர்நீதிமன்றம்

அனுமதியின்றி கூடுதல் காட்சிகளை திரையிடும் திரையரங்குகள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பண்டிகை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் ஆட்சியர் அனுமதியுடன் கூடுதல் காட்சி திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த அனுமதியை மீறி விடுமுறை நாட்களில் காலை 5 மணிக்கு துவங்கி 6 காட்சிகள் முதல் 7 காட்சிகள் வரை திரைப்படங்களை திரையிடும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தேவராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மணிக்குமார், நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு, ஒளிப்பதிவு சட்டத்தை மீறி கூடுதல் காட்சிகள் திரையிடும் திரையரங்குகளுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டனர்.

மேலும் வரி ஏய்ப்பு செய்திருந்தால் அந்த திரையரங்கு எதிராக சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


 

.