This Article is From Sep 01, 2018

மூன்றாண்டு எம்.டி இயற்கை மருத்துவ படிப்புக்கு 3 ஆம் தேதி முதல் விண்ணப்பம்

செப்டம்பர் 21 ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும், நுழைவுத் தேர்வு வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி

மூன்றாண்டு எம்.டி இயற்கை மருத்துவ படிப்புக்கு 3 ஆம் தேதி முதல் விண்ணப்பம்


இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ் நடத்தப்படும் இந்திய மருத்துவ படிப்புகளான யோகா மற்றும் இயற்கை மருத்துவம் தொடர்பான எம்.டி மேற்படிப்பிற்கான விண்ணப்பம், வரும் செப்டம்பர் மாதம் முதல் தொடங்க உள்ளது

இந்த படிப்பில் சேர விருப்பமுள்ளவர்கள், வரும் செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை, சுகாதாரத் துறையின் www.tnhealth.org  என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து விண்ணபிக்கலாம்

செப்டம்பர் 21 ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும், நுழைவுத் தேர்வு வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி நடக்க உள்ளதாக இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் விவரங்களுக்கு, www.tnhealth.org  என்ற இணைய தளத்தை அனுகவும்
 

.