This Article is From Sep 26, 2018

ஐடிஐ மாணவர் சேர்க்கைக்கான தேதி அறிவிப்பு

மேலும் விவரங்களுக்கு 044-22501006 என்ற தொலைபேசி எண் அல்லது detctsection@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்ளலாம்

ஐடிஐ மாணவர் சேர்க்கைக்கான தேதி அறிவிப்பு

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) காலியாக உள்ள இடங்களுக்கு வரும் 28-ஆம் தேதி வரை நேரடி சேர்க்கை நடைபெறவுள்ளது.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள், அருகிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களைத் தொடர்பு கொண்டு பயிற்சியில் சேரலாம். இது குறித்த தகவல்களுக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

மேலும் விவரங்களுக்கு 044-22501006 என்ற தொலைபேசி எண் அல்லது
detctsection@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

.