This Article is From Feb 19, 2019

‘’தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளையும் வெல்வோம்’’ – ராமதாஸ் நம்பிக்கை

அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாமக 10 கோரிக்கைகளை அக்கட்சியிடம் முன் வைத்துள்ளது. அதன் அடிப்படையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக ராமதாஸ் கூறியுள்ளார்.

‘’தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளையும் வெல்வோம்’’ – ராமதாஸ் நம்பிக்கை

பாமக போட்டியிடும் தொகுதிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் பாமக - அதிமுக கூட்டணி அமைந்துள்ளது
  • 7 மக்களவை தொகுதி, ஒரு மாநிலங்களவை எம்.பி. பாமகவுக்கு ஒதுக்கீடு
  • 10 கோரிக்கைகளை பாமக அதிமுகவிடம் வைத்துள்ளது

மக்களவை தேர்தலில் அதிமுக – பாமக கூட்டணி தமிழகத்தில் இறுதி செய்யப்பட்டுள்ளது. 7 மக்களவை தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை எம்.பி. ஆகியவை பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

கூட்டணியை இறுதி செய்த பின்னர் பாமக நிறுவனர் ராமதாஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது-

அதிமுக உடன் கூட்டணி அமைக்கிறோம். எந்தெந்த தொகுதியில் பாமக போட்டியிடும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும். இந்தக் கூட்டணி மக்கள் நலக் கூட்டணி, மெகா கூட்டணி, வெற்றிக் கூட்டணி. அதற்கான ஆரம்பம் இன்று நடந்திருக்கிறது.

இது ஒரு மிகப்பெரும் கூட்டணியாக, மகா கூட்டணியாக இது வளரும். புதுவை உள்பட 40 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 37 இடங்களில் வெற்றி பெற்றது.

அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்ததற்கான காரணத்தை அன்புமணி ராமதாஸ் விரைவில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி சொல்லவிருக்கிறார். சில கோரிக்கைகளை முன்வைத்துதான் அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறோம்.

மக்கள் நலனுக்காக, தமிழ்நாட்டின் உரிமைக்காக 10 கோரிக்கைகளை வைத்திருக்கிறோம். காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட மண்டலங்களாக அறிவித்தல், 20 நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும், தமிழ்நாட்டில் சாதி வாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும், மேகதாது அணை கட்டும் கர்நாடகத்தின் சதியை முறியடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை அதிமுகவிடம் வைத்துள்ளோம்.

இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

மேலும் படிக்க - அதிமுக-பாமக கூட்டணியின் உடன்படிக்கையில் உள்ளது என்ன..?- முழு விவரம்

.