This Article is From Aug 13, 2020

“அதிமுக - பாஜக கூட்டணி தொடரும்!”- மாநில பாஜக தலைவர் எல்.முருகன் கொடுத்த ட்விஸ்ட்

2021 ஆம் ஆண்டு நடக்கவுள்ள தேர்தலில் எங்கள் தலைமையிலான கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் - வி.பி.துரைசாமி

“அதிமுக - பாஜக கூட்டணி தொடரும்!”- மாநில பாஜக தலைவர் எல்.முருகன் கொடுத்த ட்விஸ்ட்

"களம் என்பது திமுக vs பாஜக என மாறியுள்ளது."- வி.பி.துரைசாமி

ஹைலைட்ஸ்

  • நேற்று வி.பி.துரைசாமி, 'தேர்தலில் பாஜக தலைமையில்தான் கூட்டணி' என்றார்
  • முருகன், அதை மறுத்து கருத்து தெரிவித்துள்ளார்
  • அதிமுகவில், முதல்வர் வேட்பாளர் பிரச்னை சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது

தமிழகத்தில் பாஜக - அதிமுக இடையிலான கூட்டணி தொடரும் என்றும், அதில் எந்தவிதப் பிரச்னைகளும் இல்லை என்றும் கூறியுள்ளார் மாநில பாஜக தலைவர் எல்.முருகன். 

பாஜகவின் மாநிலத் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, “சென்ற வாரம் வரை தமிழக தேர்தல் களத்தைப் பொறுத்தவரை, திமுக vs அதிமுக என்கிற நிலைமைதான் இருந்தது. ஆனால், சட்டமன்ற உறுப்பினரான கு.க.செல்வம் திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த பின்னர், களம் என்பது திமுக vs பாஜக என மாறியுள்ளது. 

நாங்கள் வெகு வேகமாக தமிழகத்தில் வளர்ந்து வருகிறோம். 2021 ஆம் ஆண்டு நடக்கவுள்ள தேர்தலில் எங்கள் தலைமையிலான கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்” என்று கூறினார். 

தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக இருக்கும் துரைசாமியின் இந்தக் கருத்தின் மூலம், வரவுள்ள சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இருக்காது என்பது சூசகமாக சுட்டிக்காட்டப்பட்டது. 

இந்நிலையில் எல்.முருகன், “தற்போது தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்தப் பிரச்னை இல்லை. அதிமுக - பாஜக கூட்டணி தொடரும்” என்று கூறி துரைசாமியின் கருத்துக்கு மாற்றுக் கருத்துக் கூறியுள்ளார். 


 

.