This Article is From Apr 17, 2019

தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேட்டி! - மு.க.ஸ்டாலின் மீது அதிமுக புகார்!

தேர்தல் நடத்தை விதிகளை மீறி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்ததாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார் அளித்துள்ளது.

Advertisement
தமிழ்நாடு Written by

முன்னதாக, வேலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பாக அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடும் நிலையில், அவரது வீட்டில் கடந்த மார்ச் 30-ம்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில் ரூ.10.5 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. அடுத்த 2 நாட்களுக்கு பின்னர் ரூ.11.53 கோடி பணம் வேலூரில் உள்ள துரை முருகனுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன் தொடர்ச்சியாக வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தலை நிறுத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, திமுகவினரை மிரட்டுவதற்காகவே தற்போது இதுபோன்ற வருமான வரித்துறை சோதனைகள் நடத்தப்படுகின்றன.

மோடி பிரதமராக இருக்கும் வரை எதுவும் நடக்கும். சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை கட்டுப்படுத்துவது போன்று பிரதமர் மோடி தற்போது தோ்தல் ஆணையத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.

Advertisement

வேலூரில் தேர்தலை ரத்து செய்தது குடியரசுத் தலைவர் என்பதால், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகிறோம். வேலூரில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதால் தோ்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். முறைப்படி பார்த்தால் தேனியில் தான் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் பணம் விநியோகம் செய்துள்ளார். அங்கு தான் தே்ாதலை தடை செய்ய வேண்டும்.

ஆண்டிப்பட்டியிலும் தோ்தலை நிறுத்தும் நோக்கில் தான் வருமான வரித்துறையினா் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கெல்லாம் திமுக ஒருபோதும் அஞ்சாது என்று அவர் தெரிவித்திருந்தார்.

Advertisement

இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்ததாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார் அளித்துள்ளது. அதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து எதிர்க்கட்சிகள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார், இது தேர்தல் நடத்தை விதி மீறல் ஆகும்.

மக்களவைத் தேர்தலையொட்டி 16-ந்தேதி மாலை 6 மணி முதல் அமைதி காலம் கடை பிடிக்கப்படுகிறது. இந்த விதியை கட்சி தலைவர்களும் வேட்பாளர்களும் கடைபிடிக்க வேண்டும். ஆனால் மு.க.ஸ்டாலின் இன்று பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்து மறைமுகமாக ஆதரவு தெரிவித்துள்ளார். இது தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகளுக்கு எதிரானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

Advertisement