This Article is From Feb 13, 2019

பாஜக, தேமுதிக, பாமக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை! - அதிமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பாஜக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி குறித்து ரகசிய பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், எம்.பியுமான வைத்திலிங்கம் அதிகார்ப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Advertisement
தமிழ்நாடு Posted by

பாஜக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி குறித்து ரகசிய பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், எம்.பியுமான வைத்திலிங்கம் அதிகார்ப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இன்னும் சில மாதங்களில் 2019 மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் மும்முரமாக தயராகி வருகின்றன. கூட்டணி பேச்சு வார்த்தைகளும் இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. அதேபோல தேர்தலை எந்தவித பிரச்னையுமின்றி நடத்தி முடிக்க தேர்தல் ஆணையமும் வேலைகளை செய்து வருகிறது.

நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் திமுக நடுவே கூட்டணி உறுதியாகிவிட்டது. அதேபோல், அதிமுக தரப்பில் யாருடன் கூட்டணி என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இதனிடையே, நேற்றைய தினம் புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய தலைவர் முரளிதர ராவ் கூறியதாவது, கடந்த தேர்தல்களில் நாங்கள் கூட்டணி அமைத்தோம். அதில் வெற்றி கிடைத்தது. இந்த முறையும் வெவ்வேறு கட்சிகளுடன் நாங்கள் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம்.

Advertisement

அதில் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. வெகு விரைவில் எந்தக் கட்சிகளுடன் எல்லாம் கூட்டணி என்கிற விவரத்தை நான் அறிவிப்பேன். நிச்சயமாக கூட்டணி அமைத்துதான் தேர்தலை எதிர்கொள்வோம்.பெரும்பான்மை இடங்களை தமிழகத்தில் கைப்பற்றுவோம் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று கூட்டணி குறித்து அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

Advertisement

பாஜக, பாமக, தேமுதிக உடன் ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கூட்டணி குறித்து தலைமை எடுக்கும் முடிவு தான் எங்கள் முடிவு. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். காலதாமதம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இன்னும் தேர்தல் தேதியே அறிவிக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement