This Article is From Feb 24, 2019

மீண்டும் ஒரு அதிமுக எம்.பி. கார் விபத்து! - மருத்துவமனையில் அனுமதி

கள்ளக்குறிச்சி அதிமுக எம்.பி. காமராஜ் சென்ற கார் இன்று காலை விபத்துக்குள்ளானது. இதையடுத்து அவர் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement
தமிழ்நாடு Written by

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மின்னாம்பள்ளியில் நடைபெற இருந்த அரசு விழாவில் பங்கேற்க கள்ளக்குறிச்சி அதிமுக எம்.பி. காமராஜ் சென்றுகொண்டிருந்தார். சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் அருகே சென்றபோது, எதிர்பாரா விதமாக காரின் டயர் வெடித்தது.

இதில் நிலை தடுமாறிய கார் தலைகீழாக விழுந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் சிக்கிய எம்.பி காமராஜ், லேசான காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

முன்னதாக, திண்டிவனம் அருகே சனிக்கிழமை நடந்த கார் விபத்தில் விழுப்புரத்தைச் சேர்ந்த அதிமுக எம்.பி. ராஜேந்திரன் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement


 

Advertisement