This Article is From Feb 19, 2019

அதிமுக-பாமக கூட்டணியின் உடன்படிக்கையில் உள்ளது என்ன..?- முழு விவரம்

வரும் மக்களவைத் தேர்தலில் தமிழக ஆளும் கட்சியான அதிமுக-வின் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இடம்பெற உள்ளது.

அதிமுக-பாமக கூட்டணியின் உடன்படிக்கையில் உள்ளது என்ன..?- முழு விவரம்

கூட்டணிக்கான உடன்படிக்கை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் இன்று கையெழுத்தானது. 

ஹைலைட்ஸ்

  • மக்களவைத் தேர்தலில் 7 தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது
  • உடன்படிக்கையின்போது, அன்புமணி உடனிருந்தார்
  • இடைத் தேர்தல் குறித்தும் அறிவிப்பு வெளியாகியுள்ளது

வரும் மக்களவைத் தேர்தலில் தமிழக ஆளும் கட்சியான அதிமுக-வின் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இடம்பெற உள்ளது. அதற்கான உடன்படிக்கை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் இன்று கையெழுத்தானது. 

அப்படி கையெழுத்தான உடன்படிக்கையில், ‘நடைபெற உள்ள 2019, நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க-வும், பாட்டாளி மக்கள் கட்சியும் கூட்டணி அமைத்து, தமிழ் நாட்டிலும் புதுச்சேரியிலும் தேர்தலை சந்திப்பது என்று இன்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

9v61sej

அதிமுக-விற்கும் பாமக-வுக்கும் இடையே இன்று ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக, 7 நாடாளுமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தீர்மானிகப்பட்டுள்ளது. 

2019 ஆம் ஆண்டில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் பாமக-வுக்கு ஒதுக்கப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

2019, தமிழ் நாட்டில் தற்போது காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில், அதிமுக சார்பில் 21 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு பாமக தனது முழு ஆதவை அளிக்கும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

மேலும் படிக்க - அதிமுக அணியில் பாமக… கையெழுத்தானது ஒப்பந்தம்!
 

.