மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன
ஹைலைட்ஸ்
- நேற்று அதிமுக- பாமக கூட்டணி உறுதியானது
- பாமக-வுக்கு கூட்டணியில் 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன
- பாஜக-வுக்கு கூட்டணியில் 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன
அதிமுக-வுடன் பாமக கூட்டணி வைத்து, வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளது. இதையடுத்து, பாமக-வின் மகளிர் அணிச் செயலாளர் ராஜேஸ்வரி பிரியா, கூட்டணிக்கு அதிருப்தி தெரிவித்து விலகியுள்ளதாக தகவல் வந்துள்ளது.
இது குறித்து ராஜேஸ்வரி எழுதியுள்ளதாக கூறப்படும் கடிதத்தில், ‘கடந்த 2017 ஆம் ஆண்டு, மார்ச் 8 ஆம் தேதி முதல் பாமக-வின் மாநில இளைஞர் சங்கச் செயலாளராக இருந்து வந்தேன். தற்போது கூட்டணி வைத்ததில் மனம் ஒவ்வாமல் கட்சியிலிருந்து விலகுகிறேன். இதற்கான காரணங்களை, பத்திரிகையாளர்களை சந்தித்து தெரிவிப்பேன்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசியல் வட்டாரத்தில் இந்த விவகாரம் தற்போது பரபரப்பை கிளப்பி வருகிறது.
மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதிமுக கூட்டணியில் தேமுதிக, புதிய தமிழகம், இந்திய ஜனநாகயக கட்சி உள்ளிட்ட கட்சிகளும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக- பாமக இடையில் கையெழுத்தான உடன்படிக்கையில், ‘நடைபெற உள்ள 2019, நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க-வும், பாட்டாளி மக்கள் கட்சியும் கூட்டணி அமைத்து, தமிழ் நாட்டிலும் புதுச்சேரியிலும் தேர்தலை சந்திப்பது என்று இன்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக-விற்கும் பாமக-வுக்கும் இடையே இன்று ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக, 7 நாடாளுமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தீர்மானிகப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் பாமக-வுக்கு ஒதுக்கப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2019, தமிழ் நாட்டில் தற்போது காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில், அதிமுக சார்பில் 21 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு பாமக தனது முழு ஆதவை அளிக்கும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.