This Article is From Nov 19, 2019

“அதிசயம் நடக்கும்…”- Rajini பாணியிலேயே ADMK பன்ச்!

ADMK reply to Rajini - "கல்லெறிய நினைத்தால் அவர்கள்தான் காயப்பட்டுப் போவார்கள்"

“அதிசயம் நடக்கும்…”- Rajini பாணியிலேயே ADMK பன்ச்!

ADMK reply to Rajini - "எங்களை விமர்சித்தால், நாங்களும் பதிலடிதான் கொடுப்போம்"

ADMK reply to Rajini - தமிழக அரசியலில் நேற்று அதிசயம் நடந்தது. இன்றும் நடக்கிறது. நாளையும் நடக்கும் என நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth) பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு அதிமுக (ADMK) தரப்பும், “அதிசயம் நடக்கும் என்பது உண்மைதான்… ஆனால், அவர் சொல்லும் அதிசயம் அல்ல,” எனத் தெரிவித்துள்ளது. 

நடிகர் கமல்ஹாசனின் (Kamal Haasan) 60 ஆண்டு கால திரைப் பயணத்தை சிறப்பிக்கும் வகையில், ‘கமல்-60' என்ற நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ரஜினிகாந்த், “முதல்வர் ஆவேன் என எடப்பாடி பழனிசாமி (Edappadi Palanisamy), 2 ஆண்டுகளுக்கு முன் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். தமிழக அரசு நான்கைந்து மாதங்களில் கவிழ்ந்துவிடும் என்று 99 சதவீதம் பேர் சொன்னார்கள். ஆனால் அதிசயம் நடந்து தடைகளை தாண்டி ஆட்சி நீடித்து வருகிறது. அதுமாதிரியான அதிசயம், நேற்று நடந்தது; இன்று நடக்கிறது; நாளையும் நடக்கும்,” என்றார்.

dm9cgqvg

இதற்கு தமிழக மீன்வளத் துறை அமைச்சர், ஜெயக்குமார், “ரஜினி, கமல், விஜய் என யாராக இருந்தாலும் அரியணை ஏற வேண்டும் என்ற ஆசை இருக்கலாம். அதற்கு அவர்களின் கொள்கைகளை மக்களிடத்தில் சொல்ல வேண்டும். அது குறித்து பரப்புரை செய்ய வேண்டும். ஆனால், அதை விடுத்து எங்களை விமர்சித்தால், நாங்களும் பதிலடிதான் கொடுப்போம். அவர்கள் எங்கள் மீது கல்லெறிகிறார்கள். அப்படிச் செய்தால் நாங்கள் அதை திருப்பயடிப்போம். கல்லெறிய நினைத்தால் அவர்கள்தான் காயப்பட்டுப் போவார்கள்,” என்றார் எச்சரிக்கை தொனியுடன்.

தொடர்ந்து அவர், “ரஜினிகாந்த், தமிழகத்தில் அதிசயம் நடக்கும் என்கிறார். உண்மைதான், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் அதிசயம் நடக்கும். 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியைத் தொடரும் அதிசயம் நடக்கும். இதைப் போன்ற அதிசயங்கள்தான் நடக்குமே தவிர, ரஜினி சொல்லும் அதிசயம் ஒன்றும் நடக்காது,” என தீர்க்கமாக தெரிவித்தார். 


 

.