This Article is From Feb 19, 2019

‘’அதிமுகவுக்கு டெபாசிட்டே கிடைக்காது’’ – அன்புமணி பேசிய வீடியோவை வெளியிட்ட உதயநிதி

அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்திருக்கிறது. அக்கட்சியை பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பலமுறை விமர்சித்திருக்கிறார். அந்த வீடியோ காட்சிகளை திமுகவினர் வெளியிட்டு வருகின்றனர்.

‘’அதிமுகவுக்கு டெபாசிட்டே கிடைக்காது’’ – அன்புமணி பேசிய வீடியோவை வெளியிட்ட உதயநிதி

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை எம்.பி.யும் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஹைலைட்ஸ்

  • அன்புமணி பேசிய வீடியோவை உதயநிதி வெளியிட்டுள்ளார்
  • அதிமுகவுக்கு டெபாசிட்டே கிடைக்காது என்று அன்புமணி பேசியுள்ளார்
  • அதிமுகவுடன்தான் அன்புமணியின் பாமக கூட்டணி வைத்துள்ளது.

அதிமுகவுக்கு டெபாசிட்டே கிடைக்காது என்று அந்த கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கும் பாமகவின் இளைஞரணி தலைவர் பேசும் வீடியோவை, உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைத்துள்ளது. பாமகவுக்கு 7 மக்களவை தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

 

அதிமுகவை பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி  ராமதாஸ் பலமுறை விமர்சித்திருக்கிறார். அந்த வீடியோ காட்சிகளை திமுகவினர் வெளியிட்டு வருகின்றனர். அவற்றில் ஒன்றை உதயநிதி ஸ்டாலின் வெளிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார். அந்த காட்சியில் வரும் தேர்தலில் அதிமுக டெபாசிட்டே வாங்காது என்று அன்புமணி பேசியுள்ளார்.

பாமகவை திமுக தலைவர் ஸ்டாலினும் கடுமையாக விமர்சித்து வருகிறார். பணத்துக்காக அதிமுகவுடன் ராமதாஸ் கூட்டணி வைத்துள்ளதாகவும், மாநில வளர்ச்சியில் அவருக்கு அக்கறை இல்லை என்றும் ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார்.

.