This Article is From Apr 01, 2019

அன்புமணியிடம் கேள்வி கேட்ட அதிமுக தொண்டருக்கு நேர்ந்த கதி..!

கேள்விகேட்ட அதிமுக தொண்டரை, அதிமுக-வின் மூத்த நிர்வாகியும் அந்தக் கட்சியைச் சேர்ந்த பலரும் அடித்துள்ளது மேச்சேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அன்புமணியிடம் கேள்வி கேட்ட அதிமுக தொண்டருக்கு நேர்ந்த கதி..!

அதிமுக தொண்டருக்கு கூட்டத்தில் அடி, உதை விழுந்துள்ளது

பா.ம.க இளைஞரணித் தலைவரும், தர்மபுரி மக்களவைத் தொகுதி எம்.பி-யுமான அன்புமணி ராமதாஸ், எதிர்வரும் தேர்தலிலும் தர்மபுரியில் போட்டியிடுகிறார். இதனால், அங்கு அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இப்படி தர்மபுரி, மேச்சேரியில் அவர் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, அதிமுக தொண்டர் அவரை கேள்விகளால் துளைத்துள்ளார். இதையடுத்து அந்த அதிமுக தொண்டருக்கு கூட்டத்தில் அடி, உதை விழுந்துள்ளது. இந்த மொத்த சம்பவமும் வீடியோவாக எடுக்கப்பட்டு தற்போது வைரலாக பரவி வருகிறது. 

மேச்சேரியில், அதிமுக மூத்த நிர்வாகி செம்மலை உள்ளிட்ட ஆளுங்கட்சியினருடன் அன்புமணி, பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது மேடைக்கு அருகில் வந்த அதிமுக-வைச் சேர்ந்த தங்கராஜ், ‘ஐயா, கடந்த முறை இங்கதான் நின்னு ஜெயிச்சீங்க. அதுக்கு அப்புறம் எங்க போனீங்க. 5 வருஷமா எங்க இருந்தீங்க. 8 வழிச் சாலைக்கு எதிராக மக்கள் போராடியபோது எங்க போனீங்க ஐயா' என்று கேள்வி எழுப்பினார். 

இதைப் பார்த்த செம்மலை, தங்கராஜை பளார் பளார் என்று கன்னத்தில் அரைந்தார். தொடர்ந்து காவலர்கள் தங்கராஜை, அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தினர். அதன் பின்னரும் கூட்டத்திலிருந்த கட்சித் தொண்டர்கள், தங்கராஜை அடித்துள்ளனர். இதனால் அவர் மயக்கமடைந்து கீழே விழுந்தார். இந்த சம்பவம் வீடியோவாக பதிவாகி தற்போது வைரலாகி வருகிறது. 

fbkpk4kg

கேள்விகேட்ட அதிமுக தொண்டரை, அதிமுக-வின் மூத்த நிர்வாகியும் அந்தக் கட்சியைச் சேர்ந்த பலரும் அடித்துள்ளது மேச்சேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

.