This Article is From Mar 04, 2019

வாக்கு சேகரிப்புக்காக ரூ.2000 நிதியுதவி திட்டம்! - தேர்தல் ஆணையத்தில் திமுக மனு

மக்களவை தேர்தலில் வாக்கு சேகரிப்புக்காக ரூ.2000 நிதியுதவி திட்டம் பயன்படுத்தப்படுகிறது என தலைமை தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பில் புகார் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement
தமிழ்நாடு Written by

மக்களவை தேர்தலில் வாக்கு சேகரிப்புக்காக ரூ.2000 நிதியுதவி திட்டம் பயன்படுத்தப்படுகிறது என தலைமை தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பில் புகார் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மக்கள் 60 லட்சம் பேருக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.2,000 நிதி உதவி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் அறிவிக்கப்பட்டது.

இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, பயணாளிகள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக பட்ஜெட்டில் ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி உதவி திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பாக புகார் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் மனுவை அளித்தார்.

Advertisement

அதில், வறுமை கோட்டுக்கு கீழ் இருப்பவர்களுக்கு வழங்கப்படுவதாக கூறி, ஆளுங்கட்சியினர் வாக்கு சேகரிப்புக்காக ரூ.2,000 அளித்து வருகின்றனர்.

மேலும் மக்களவை தேர்தல் வரவுள்ள நிலையில் ரூ.2000 நிதியுதவி அளிப்பது தேர்தல் ஆதாயமாக அமையும் என்றும் அரசியல் ஆதாயத்திற்காக அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு நிதி திட்டத்தை தடுக்க வேண்டும் என்றும் அதிமுக தொண்டர்களுக்கு பணம் தரவே ரூ.2000 சிறப்பு நிதி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement
Advertisement