தகாத உறவு இந்தியாவில் குற்றச்செயல் அல்ல என்று உச்ச நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது
New Delhi: தகாத உறவு இந்தியாவில் குற்றச் செயல் அல்ல என்று உச்ச நீதிமன்றம் இன்று அளித்துள்ள உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. அதே நேரத்தில் ஒருவர் விவகாரத்து பெற வேண்டும் என்றால் தகாத உறவை காரணம் காட்டி பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகாத உறவு தொடர்பான வழக்கில், தகாத உறவில் ஈடுபட்ட மனைவிக்கு ஆதரவாக கணவன் இருக்கும்போது, அதனை எப்படி குற்றச் செயலாக கருத முடியும் என்று கேள்வி எழுப்பியதோடு, அதுதொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டது. இதற்கு பதில் அளித்த மத்திய அரசு, தகாத உறவு குற்றச் செயலாக இருந்தால்தான் திருமணத்தின் புனிதத் தன்மை பாதுகாக்கப்படும் என்றும் பதில் அளித்துள்ளது.
தகாத உறவு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவின் முக்கிய அம்சங்கள்:
1. திருமணம் ஆன பெண்ணுடன் இன்னொரு இளைஞர் உறவு வைத்துக் கொள்வது குற்றச் செயல் அல்ல.
2. ஆணுக்கு பெண் சமம் என்பதை அரசு நிர்வாகம் கருத்தில் கொள்ள வேண்டும். மனைவியின் முழு உரிமையாளர் கணவர் அல்ல.
3. நான்கு சுவற்றுக்குள் நடக்கும் அந்தரங்க விஷயங்களை குற்றச் செயலாக கருதுவது தவறு.
4. சட்டம் ஆணுக்கும், பெண்ணுக்கும் தனியே என்று ஏதுமில்லை. சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான்.
5. நாகரிக சமூகத்தில் பெண்ணின் கண்ணியத்தையும், சமத்துவத்தையும் பாதிக்கும் சட்டங்கள் அரசியலமைப்பு பாதிப்பதாகவே கருத வேண்டும்.
6. பெண்களின் அந்தரங்க உரிமையில் யாரும் தலையிட முடியாது.
7. கற்பு என்பது மனைவிக்கு மட்டும் அல்ல; கணவர்களுக்கு கற்பு உண்டு.