New Delhi: இன்று ராஜ்யசபா துணை சபாநாயகருக்கான தேர்தலில் மத்திய அரசு தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கு எளிமையான வெற்றி கிட்டயது. இந்தத் தேர்தலில் எதிர்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரளும் என எதிர்பார்க்கப்பட்டது. அரசு சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் ஹரிவன்ஷுக்கு ஆதரவாக 125 எம்.பி-க்கள் வாக்களித்தனர். எதிர்கட்சி வேட்பாளருக்கு 105 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளத்தின் ஆதரவால் தான் அரசு சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளருக்கு சுலபமான வெற்றி கிடைத்தது.
10 ஃபேக்ட்ஸ்:
நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தின் ஹரிவன்ஷ் தான், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டிக்கு நிறுத்தப்பட்டார். ஹரிவன்ஷ் காங்கிரஸின் பி.கே.ஹரிபிரசாத்தை எதிர்த்து போட்டியிட்டார்.
ஹரிவன்ஷின் வெற்றி குறித்து பிரதமர் மோடி, ’நன்கு படித்தவரான ஹரிவன்ஷ் நாட்டுக்காக பல காலம் சேவை புரிந்துள்ளார். அவர் ராஜ்யசபாவில் வந்துள்ளது மகிழ்ச்சி’ என்றுள்ளார்.
பிஜூ ஜனதா தளத்தின் ஆதரவால் அரசுக்கு பெரும் முன்னிலை கிடைத்தது. இல்லையென்றால், இந்தத் தேர்தலில் எதிர்கட்சிகளுக்கும் வாய்ப்பிருந்திருக்கும்.
கடந்த சில நாட்களாக பாஜக தலைவர் அமித்ஷா, அகாலி தளம் மற்றும் சிவசேனா கட்சிகளுடன் தொடர்ந்து போன் மூலம் பேசி ஆதரவு கோரி வந்தார். அவர்களும் இன்றைய வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்தது, அரசுக்கு சாதகமாக அமைந்தது.
ராகுல் காந்தி, அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு போன் மூலம் அழைத்து, தங்களது வேட்பாளருக்கு ஆதரவு கோரவில்லை என்பதால், ஆம் ஆத்மி தரப்பினர் கோபத்தில் இருந்தனர். இதனால், அவர்கள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தனர்.
ராஜ்யசபாவின் மொத்த பலம் 244. பெரும்பான்மை பெற 123 எம்.பி-க்கள் ஆதரவு வேண்டும். ஆனால், பல எம்.பி-க்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாததால் பெரும்பான்மை பெற 119 என எண்ணிக்கை குறைந்தது.
ஆம் ஆத்மி கட்சியைத் தவிர்த்து, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பிடிபி கட்சிகளும் இன்றைய வாக்கெடுப்பைப் புறக்கணித்தன.
காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், இடதுசாரிகள் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகள் இணைந்து காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்தன.
காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியிடமிருந்தும் ஆதரவை எதிர்பார்த்தது. ஆனால், அந்தக் கட்சி இரு தரப்புக்கும் ஆதரவு தெரிவிக்காமல் வாக்கெடுப்பிலிருந்து விலகி நின்றது.