This Article is From Feb 06, 2020

கொரோனா வைரஸ் நோயாளிகளின் சிகிச்சைக்காக 10 நிமிடத்தில் திருமணத்தை முடித்த டாக்டர்!!

திருமண நிகழ்வில் அதிக நேரம் செலவிடமுடியது என்றும்...

கொரோனா வைரஸ் நோயாளிகளின் சிகிச்சைக்காக 10 நிமிடத்தில் திருமணத்தை முடித்த டாக்டர்!!

இதனையடுத்து இவர்கள் இருவருக்கும் வெறும் 10 நிமிடங்களில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

சீனாவில் 560க்கும் மேற்பட்ட உயிர்களை பலிவாங்கியுள்ள கொரோனா வைரஸ், இந்தியா, பிரிட்டன் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட 20 நாடுகளுக்குப் பரவியுள்ளது. இந்த நோய் தொற்றின் மையப்பகுதியாக கருதப்படும் ஹூபே மாகாணத்தின் தலைநகர் வுஹானில், சுமார் 56 மில்லியன் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். பரவி வரும் இந்த நோயைத் தடுக்க மருத்துவர்களும் அயராது உழைத்து வருகின்றனர். 

இந்த அசாதாரண சூழ்நிலையில் சீனாவில் மருத்துவர் ஒருவர் நோயாளிகளுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்க தனது திருமண நிகழ்வை வெறும் 10 நிமிடத்தில் முடித்துவிட்டு மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ள செயல் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

சீனா டைம்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் தேதி 'ஹெஸி' என்ற இடத்தில் 'லி ஜிஜிங்' என்று அழைக்கப்படும் மணமகனுக்கும் 'யு ஓங்கியன்' என்று அழைக்கப்படும் மணமகளுக்கும் திருமணம் நடந்துள்ளது. 

மணமகன் 'யு ஓங்கியன்' ஒரு மகேப்பேறு மருத்துவர் என்பதால், நாட்டில் நிலவும் இந்த சூழலில் தன்னால் திருமண நிகழ்வில் அதிக நேரம் செலவிட முடியது என்றும், தான் விரைந்து மருத்துவமனைக்குத் திரும்ப வேண்டும் என்றும் கூற, மணமகளும் அதற்குச் சம்மதம் தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து இவர்கள் இருவருக்கும் வெறும் 10 நிமிடங்களில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. தற்போது இந்த தகவல் நாடு முழுவதும் பரவ, அந்த புதுமண ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. 

.