Read in English
This Article is From Jun 17, 2019

பாகிஸ்தான் மீது மீண்டும் ஒரு சர்ஜிகல் ஸ்ட்ரைக்! இந்திய கிரிக்கெட் அணியை பாராட்டிய அமித் ஷா!!

உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Advertisement
இந்தியா Edited by

பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு பாராட்டு மழை குவிந்து வருகிறது.

New Delhi:

உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானை இந்திய அணி வீழ்த்தியதை குறிப்பிட்டு, பாகிஸ்தான் மீது இன்னொரு சர்ஜிகல் ஸ்ட்ரைக்கை இந்தியா நடத்தியுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார். 

உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் நேற்று மான்செஸ்டர் நகரில் நடைபெற்றது. இதில் மழை குறுக்கிட்ட நிலையில் இந்திய அணி டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், 'பாகிஸ்தான் மீது இன்னொரு சர்ஜிகல் ஸ்ட்ரைக்கை இந்தியா நடத்தியுள்ளது. இதிலும் வெற்றிதான் இந்திய அணிக்கு கிடைத்திருக்கிறது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி வீரர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். ஒவ்வொரு இந்தியரும் இந்த வெற்றயை கொண்டாட வேண்டிய தருணம் இது' என்று குறிப்பிட்டுள்ளார். 

அவரது ட்விட்டை, பீகாரின் எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் ரி ட்வீட் செய்துள்ளது. அந்த ரி ட்வீட்டில் பீகாரில் 200-க்கும் அதிகமான குழந்தைகள் மூளைக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். இந்த பாதிப்பு எதிராக சர்ஜிகல் ஸ்ட்ரைக்கை நடத்துங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

பீகார் மாநிலத்தில் மூளைக் காய்ச்சல் காரணமாக 200-க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். சுமார் 300 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Advertisement
Advertisement