Kottayam:
குரோஷியா அணியுடன் அர்ஜென்டினா தோல்வி அடைந்த வருத்தத்தில் இருந்த கேரள இளைஞரை இன்று காலை முதல் காணவில்லை. கடைசியாக, அர்ஜென்டினா - குரோஷியா மோதிய போட்டியை பார்த்துக் கொண்டிருந்ததாக தினு அலெக்ஸ் என்ற அந்த இளைஞரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
மேலும், அவர் தற்கொலைக் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளார். அதில் “ இனி இந்த உலகத்தில் நான் பார்க்க எதுவும் இல்லை” என்று எழுதி வைத்திருக்கிறார். காவல் துறையும், தீயணைப்பு துறையும், அலெக்ஸின் வீட்டு சுற்றுபுறங்களில் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அலெக்ஸ் போல கேரளாவில் கால்பந்து ரசிகர்கள் ஏராளம். சமீபத்தில் கேரளாவைச் சேர்ந்த கிளிஃபின் ஃபிரான்சிஸ் என்ற அர்ஜென்டினா அண்யின் ரசிகர் ரஷ்யாவுக்கு சைக்கிளில் சென்றிருக்கிறார்.
ஃபிப்ரவரி 23-ம் தேதி கேராளாவில் இருந்து துபாய் சென்று, அங்கு ஒரு சைக்கிளை வாங்கியிருக்கிறார். அங்கிருந்து ஈரான் சென்று, எல்லை வழியாக ரஷ்யாவுக்குள் நுழைந்து போட்டி நடைபெறும் மைதானத்துக்கு வந்துள்ளார். “மகிழ்ச்சியாக இருக்கிறேன். 4 மாதம் பயணித்து வந்திருக்கிறேன்” என்று அவர் குதூகலித்துள்ளார்.