Read in English
This Article is From Jul 04, 2018

காங்கிரஸின் சமூக ஊடக மேலாளர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு

இந்தியா, பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடு எனக் கூறப்பட்டிருந்ததையடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாஜகவை கடுமையாக தாக்கிப் பேசினார்

Advertisement
இந்தியா
NEW DELHI:

புது டில்லி: சமீபத்தில் வெளிவந்த ஒரு ஆய்வில் இந்தியா, பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடு எனக் கூறப்பட்டிருந்ததையடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாஜகவை கடுமையாக தாக்கிப் பேசினார். இதற்கு பதிலளித்த பேசிய பாஜக, முதலில் காங்கிரஸ் சமூக ஊடகப் பிரிவு மேலாளர் சிராஜ் பட்நாயக் மீது முன்னாள் ஊழியர் அளித்த பாலியல் துன்புறுத்தல் புகாரில் நடவடிக்கை எடுங்கள் என கூறியிருந்தது.

பாஜக தலைவர் மீனாட்சி லெகி, டெல்லி போலிசார் அந்த பெண் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும், எவருடைய அழுத்தத்தின் பேரில் இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை என்பதை தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டிருந்தார். மேலும் போலிசார் காங்கிரஸ் மாணவர் பிரிவான என்.எஸ்.யூ.ஐ மீதும் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் விசாரணை நடத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

சில மணி நேரங்களுக்கு பிறகு மூத்த காவல் துறை அதிகாரி மாதூர் வர்மா, ஜுன் 11 அன்று கொடுக்கப்பட்ட அந்த பெண்ணின் புகாரைத் தொடர்ந்து சிராஜ் பட்நாயக் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

சிராஜ் பட்நாயக் ஒரு பெண்ணை அவமானம் செய்தது மற்றும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியது ஆகியவற்றிற்காக விசாரிக்கப்படுகிறார். இந்த பிரிவுகளின் கீழ் மூன்று வருடங்கள் வரை சிறை தண்டனை பெறலாம்.

காங்கிரஸ் சமூக ஊடகப் பிரிவுக்கு தலைமை வகிக்கும் திவ்யா ஸ்பந்தனா பாஜகவின் இந்த குற்றச்சாட்டை முதல் முறையாக கேட்பதாக கூறியுள்ளார்.

மேலும் ட்விட்டரில், சிராஜ் பட்நாயக்கிற்கு ஆதரவாக காங்கிரஸ் சமூக ஊடகப் பிரிவின் உறுப்பினர்கள் கையெழுத்திட்ட அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

தாம்ஸன் ராய்ட்டர்ஸின், பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடு என்ற கருத்துக்கணிப்பு போலியானது என்று லெகி கூறியதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது.

இந்த ஆய்வின் அறிக்கையைத் தான் மேற்கோள் காட்டி ராகுல் காந்தி பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடியை தாக்கி பேசியிருந்தார். மேலும் இந்தியாவில் அதிக பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களால் பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடாக மாறியிருப்பது ”அவமானம்” என்றார்.

இந்த ஆய்வு, இந்தியாவை தவறான கண்ணோட்டத்தில் காட்டுவதாகவும், இதைவிட மோசமான சம்பவங்கள் வெளிநாடுகளில் தான் நடக்கின்றன. நியூ டெல்லி அல்ல நியூயார்க் தான் உலகின் ”ரேப் கேபிட்டல்” என்றார்.

சிபிஎம் தலைவர் மற்றும் செயற்பாட்டாளர் பிரிந்தா காரத் லெகியின் கருத்துக்கள் பாஜகவின் மனப்போக்கை தான் காட்டுகிறது என்றார்.

"ஒரு பெண்ணாக லெகி, இந்தியாவில் தற்போது பெண்கள் அன்றாடம் சந்திக்கும் பாதுகாப்பற்ற சூழல் மீது சற்று உணர்வுப்பூர்வமாக கவனம் செலுத்த வேண்டும். அந்த ஆய்வோடு அவர் உடன்படாமல் இருக்கலாம். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில் இளம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்திருப்பதை காட்டும் தன்னுடைய சொந்த அரசாங்கத்தின் தரவுகளை அவர் கேள்விக்குள்ளாக்க முடியாது" என பிருந்தா காரத் கூறியதாக பிடிஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.

செயற்பாட்டாளர் கவிதா கிருஷ்ணன் கூறுகையில், இந்த ஆய்வு நம்பகத்தன்மையானது என வாதிட முடியாது, ஆனால் பாஜக, இதே நிறுவனம் 2013ம் ஆண்டு வெளியிட்ட ஆய்வில் எந்த தவறுகளையும் கண்டுபிடிக்கவில்லை என்றார்.

”லெகியின் சொந்த கட்சியான பாஜகவிற்கு யூபிஏ ஆட்சியில் இதே ஆய்வு இந்தியா பெண்களுக்கு 4வது பாதுகாப்பற்ற நாடு எனக் கூறியதை நியாயப்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுவதில் எந்த பிரச்சனையும் இருந்திருக்கவில்லை” என்றார் கவிதா.

Advertisement