ஓட்டு உங்கள் உரிமை என்று சிவகார்த்திகேயன் ட்விட் செய்துள்ளார்.
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் காத்திருந்த நடிகர் சிவகார்த்திகேயன், நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தனது வாக்கை பதிவு செய்தார்.
தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். வளசரவாக்கத்தில் இருக்கும் அவர், அங்குள்ள குட்ஷெப்பர்டு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் வாக்கு அளிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத காரணத்தால் அவர் வாக்களிக்க செல்லவில்லை.
சிவாவின் வாக்காளர் அடையாள அட்டை விவரம் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் விடுபட்ருந்ததால் இந்த பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் தேர்தல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு நீண்ட போராட்டத்திற்கு பின்னர் சிவகார்த்திகேயன் வாக்களித்துள்ளார். தனது வாக்கை பதிவு செய்த பின்னர் விரல் மையுடன் புகைப்படம் எடுத்து அதனை ட்விட்டரில் அவர் பதிவிட்டிருக்கிறார்.
வாக்களிப்பது உங்கள் உரிமை. உங்கள் உரிமைக்காக போராடுங்கள் என்று சிவா தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதேபோன்று வாக்காளர் பட்டியில் பெயர் இல்லாததால் நடிகர் ரமேஷ் கண்ணா வாக்களிக்காமல் திரும்பிச் சென்றார்.