Read in English
This Article is From Oct 14, 2018

ஒடிசாவில் குழந்தைகளுக்கு பெயராகும் ’டிட்லி’!

கஞ்சாம், ஜெகத்சிங்பூர் மற்றும் நயாகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் ’டிட்லி’ புயலின் போது அல்லது புயலுக்கு முன்னதாக பிறந்த குழந்தைகளுக்கு ’டிட்லி’ என பெயர் சூட்டியுள்ளனர்

Advertisement
இந்தியா

ஒடிசா மற்றும் ஆந்திர பிரதேசத்தை தாக்கிய டிட்லி புயலால் 9 பேர் உயிரிழந்துள்ளனர்

Bhubaneswar/Berhampur:

ஒடிசாவில் சமீபத்தில் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு டிட்லி என பெயர் சூட்டப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஒடிசா மாநிலத்தை பலத்த காற்றுடன், பலத்த மழை பெய்து டிட்லி புயல் புரட்டி எடுத்தது.

இதைத்தொடர்ந்து, ஒடிசாவின் கஞ்சாம், ஜெகத்சிங்பூர் மற்றும் நயாகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் ’டிட்லி’ புயலின் போது அல்லது புயலுக்கு முன்னதாக பிறந்த குழந்தைகளுக்கு ’டிட்லி’ என பெயர் சூட்டி வருகின்றனர்.

வங்கக் கடலில் உருவான டிட்லி புயல், ஒடிசாவிற்கும் ஆந்திராவிற்கும் இடையே கடந்த வியாழக்கிழமை கரை கடந்தது. இதனால், 150 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் மழையும் பெய்தது. இதில் புயல் தாக்குவதற்கு முன்னதாக 5 கடலோர பகுதிகளில் இருந்த 3 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

இதில் பிரதிப் பகுதியைச் சேர்ந்த அலிமா (20) அவர் புயலின் போது இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்தார். அவர் புயலின் போது குழந்தைகள் பிறந்ததால் அவர்களுக்கு டிட்லி என பெயர் சூட்டினார். ’டிட்லி’ என்றால் வண்ணத்துப்பூச்சி எனப் பொருளாகும்.

Advertisement

அஸ்கா பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் மட்டும் கடந்த புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமையின் போது 9 பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர். இதுகுறித்து அந்த மருத்துவமனையின் மகப்பேறு நல மருத்துவர் கூறுகையில், புதன்கிழமை நள்ளிரவுக்கு மேல் பிறந்த குழந்தைகளுக்கு ’டிட்லி’ என பெயரிட முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Advertisement