This Article is From Jan 07, 2020

தொடர்ந்து உச்சம் தொட்டு வந்த தங்கம் விலை இன்று திடீர் சரிவு..!

தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் உயர்ந்திருக்கிறது.

Advertisement
Business Written by

வரலாற்றில் இல்லாத அளவுக்கு தங்கத்தின் விலை 30,000 ரூபாயையும் தாண்டியது.

நாளுக்குநாள் இரு விஷயங்கள்  போட்டி போட்டுக் கொண்டு உச்சம் தொடும் முயற்சியில் ஈடுபடுகின்றன, அந்த இரண்டு விஷயங்கள் தான் எரிபொருளும், தங்கமும். அண்மைக்காலமாக தொடர் உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை இன்று சற்றே சரிவை சந்தித்துள்ளது. 

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதலே தங்கத்தின் விலை மிகவும் உயரத் தொடங்கியது. வரலாற்றில் இல்லாத அளவுக்கு தங்கத்தின் விலை 30,000 ரூபாயையும் தாண்டியது. அதன் பின்னர் மீண்டும் டிசம்பர் மாத தொடக்கத்தில் தங்கத்தின் விலை மீண்டும் கீழிறங்கி ரூ.29 ஆயிரத்தைத் தொட்டது.

இவ்வாறு ஏற்ற இறக்கங்களை சந்திக்கும் தங்கம், கடந்த ஆறு நாட்களாக சவரனுக்கு ரூ.1,288 உயர்ந்திருந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.424 குறைந்து ரூ. 30,744க்கு விற்பனை ஆகின்றது.

தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் உயர்ந்திருக்கிறது. நேற்று 06.01.2020 அன்று சென்னையில் ஒரு கிலோ வெள்ளி 51,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று கிலோவிற்கு 50 ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி 51,050 ரூபாய்க்கு விற்பனை ஆகின்றது.

Advertisement


 

Advertisement